தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு விஷேட கலந்துரையாடல் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, December 20, 2013

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு விஷேட கலந்துரையாடல் (படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

தேசிய  டெங்கு  கட்டுப்பாட்டு  வாரத்தினை  முன்னிட்டு விஷேட கலந்துரையாடலொன்று காத்தான்குடி நகரசபை கேட்போர் கூடத்தில் நகரசபை செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் தலைமையில் நேற்று முன்தினம் புதன்கிழமை (18.12.2013) நடைபெற்றது.


இவ்விஷேட கலந்துரையாடலில் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.நஸீர்தீன்,காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர்எம்.ரி.காலித் ஜேபி, காத்தான்குடி நகரசபை பிரதம முகாமைத்துவ உதவியாளர் நியாஸ் ,ஜம்இய்யத்துல்  உலமா  பிரதிநிதிகள்,   நகரசபை உத்தியோகத்தர்கள்,காத்தான்குடி பொலிசார்   பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ,  மற்றும் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றிய பிரதிநிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு வீடுகளை பரிசோதனை செய்தல் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைளை மேற்கொள்ளல் போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக  ஆராயப்பட்டது.
No comments:

Post Top Ad