முதலையுடன் போராடி மகனை காப்பாற்றிய தந்தையினால் மகனின் காலை காப்பாற்ற முடியவில்லை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 30, 2013

முதலையுடன் போராடி மகனை காப்பாற்றிய தந்தையினால் மகனின் காலை காப்பாற்ற முடியவில்லை


ஜிம்பாப்வேயில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தபாட்ஷ்வா கசேர். இவரது 11 வயது மகன் தபிவா. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தந்தையும், மகனும் தங்கள் கிராமத்துக்கு செல்ல ஆற்றைக் கடந்தனர்.

அப்போது ஒரு முதலை தபிவாவை வாயால் கவ்விப் பிடித்தது. வாய்க்குள் சிக்கிய சிறுவனை கடித்து குதற ஆரம்பித்தது முதலை. 
இந்த இக்கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த அவனது தந்தை தபாட்ஷவாவிடம் ஆயுதம் எதுவும் இல்லை.  இருந்தாலும் ஆக்ரோஷத்துடன் முதலை மீது பாய்ந்தார். அதன் முதுகில் அமர்ந்து அதன் தாடையை அகற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. தலையில் தனது கையால் ஓங்கி குத்தினார்.
இறுதியில் அதன் கண்ணில் ஓங்கி குத்தி கிழித்தார். இதனால் நிலை தடுமாறிய முதலை தனது வாயை திறந்தது. அதை தொடர்ந்து முதலை வாய்க்குள் சிக்கிய சிறுவன் தபிவா மீட்கப் பட்டான்.
ஆனால் முதலை கடித்ததில் அவனது ஒரு கால் துண்டானது. தபாட்ஷ்வா கையிலும் ரத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜிம்பாப்வேயில் மழை காலத்தில் முதலைகள் தாக்குதல் சர்வ சாதாரணமாக நடக்கிறது.

No comments:

Post Top Ad