தென்னிந்தியாவை விட வடக்கு-இலங்கையிலுள்ள மக்கள் நல்ல வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்' ! சுசில் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 02, 2013

தென்னிந்தியாவை விட வடக்கு-இலங்கையிலுள்ள மக்கள் நல்ல வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்' ! சுசில்

(tm)

'அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் வடக்கு-கிழக்கு இணைப்பு குறித்து எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன செய்துகொண்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி தற்காலிகமாகவே வடக்கு கிழக்கு பிராந்தியம் இணைக்கப்பட்டது. பின்னர், வடக்கு கிழக்கு இணைப்பு அரசியலமைப்புக்கு முரணானது என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்த பின்னர், அதுபற்றி பேச எவருக்கும் உரிமை கிடையாது' என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.


'இலங்கையின் உள்நாட்டு விவகாரம் பற்றி பேசுவதற்கு வெளியாட்களுக்கு உரிமை கிடையாது. இலங்கை தனி இறையாண்மை கொண்ட ஒரு நாடு, இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சட்ட நடைமுறைகள் பற்றி பேசுவதற்கு வெளியாட்களுக்கு எந்த விதமான உரிமையும் கிடையாது. 

இந்தியாவில் தேர்தல் நடக்கவுள்ள சூழ்நிலையில், 'வாக்கு சேகரிக்கும் நோக்குடன்' அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்துக்களை இலங்கை பெரிய அளவில் கணக்கில் எடுக்கவில்லை' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

'எங்கள் நாட்டு மக்களுக்கு பயன்படுத்த கழிப்பறைகள் இருக்கின்றன. முதலில் அவர்களை அவர்களின் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கச்சொல்லுங்கள். எங்கள் நாட்டுப் பிரச்சனைகள் பற்றி அவர்கள் பேசவேண்டியதில்லை. அவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

'கனவுலகில் இருந்துகொண்டு அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அமைச்சர் சிதம்பரத்தை முதலில் இங்கு வந்து நிலைமையை பார்க்கச் சொல்லுங்கள். தென்னிந்தியாவை விட வடக்கு-இலங்கையிலுள்ள மக்கள் நல்ல வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post Top Ad