பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஒன்றுகூடல் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 03, 2013

பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஒன்றுகூடல்


(மூதூர் முறாசில்)

பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் மூதூர் கிளையினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒன்றுகூடல் இன்று செவ்வாய் கிழமை இடம்பெற்றது.

பெண்கள் வலையமைப்பின் மூதூர் பிரதேச தலைவி திருமதி சந்திர மலர் தலைமையில் மூதூர் மல்லிகைத்தீவு கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம்.நிஸார்,மாவட்ட இணைப்பாளர் என். அஞ்ஜலி, ஆவணக்காப்பாளர் திருமதி கே. ஜாலினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


பெண்கள் வெளிநாட்டிற்கு பணிப் பெண்களாகச் செல்வதும் குடும்பத்தலைவரின் போதைவஸ்துப் பாவனையும் நவீன தொடர்பு சாதனங்களுமே பெண்கள் வன்முறைக்குள்ளாவதில் அதிக வாய்ப்பை ஏற்படுத்துவதாக   பலராலும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை வாழ்வாதாரமற்ற பெண்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வதற்கு அரசாங்கமும் அரச சார்பற்ற நிறுவனங்களும்ää தனி நபர்களும் முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்போது இவ்வொன்று கூடலில் கலந்து கொண்ட இரண்டு முஸ்லிம் சகோதரிகள்      தமது சோகக் கதைகளைக்   கூறியதையும் அவதானிக்க முடிந்தது.  

No comments:

Post Top Ad