வெல்லம்பிட்டி மக்களுக்கு சார்ஜா வீடமைப்புத் திட்டம் கையளிப்பு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 03, 2013

வெல்லம்பிட்டி மக்களுக்கு சார்ஜா வீடமைப்புத் திட்டம் கையளிப்பு (படங்கள் இணைப்பு)வெல்லம்பிட்டி,கோகிலவத்தை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட சார்ஜா வீடமைப்புத் திட்டம் கடந்த சனிக்கிழமை பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.


16 வீடுகளை கொண்ட இந்த வீட்டுத் திட்டத்திற்கான நிதி ஜக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜா சர்வதேச அறக்கட்டளை இயக்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஜக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் அப்துல் ஹாமீட் ஏ.கே. அல் முலாஇ சிரேஸ்ட அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசிஇ அதாவுட செனவிரத்தினஇ மற்றும் சார்ஜா சர்வதேச அறக்கட்டளை இயக்கத்தின் பணிப்பாளர் தாரீக் சயீட் அல் நுஹ்மான் உட்பட பலர் இந்த வீடமைப்புத் திட்ட கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த வீட்டுத் திட்டத்திற்கான மூன்று ஏக்கர் காணி கோகிலவத்தையிலுள்ள இம்தியாஸ் ஹாஜியார் அன்பளிப்புச் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த வீட்டுத் திட்டத்துடன் பயனாளிகளுக்கு அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


No comments:

Post Top Ad