போர்க்குற்றங்களை தெரிந்துகொள்ள டேவிட் கமரூன் பலஸ்தீன் செல்ல வேண்டும் ; தயான் ஜயதிலக்க - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, December 05, 2013

போர்க்குற்றங்களை தெரிந்துகொள்ள டேவிட் கமரூன் பலஸ்தீன் செல்ல வேண்டும் ; தயான் ஜயதிலக்க


போர்க்குற்றங்கள், காணாமல் போனவர்கள், காணி சுவீகரிப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமாயின் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பாலஸ்தீனத்திற்கு விஜயம் மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் இராஜதந்திரியான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற பாலஸ்தீன விடுதலை தொடர்பான கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாடுகள் தமது செல்வாக்குகளை தவறாக பயன்படுத்துகின்றன. பிரித்தானிய பிரதமர் மக்கள் குறித்து கரிசனை கொண்டவராக இருந்தால், அரசியல் கைதிகள் தொடர்பில் அக்கறை கொண்டவராக இருந்தால், காணாமல் போனவர்கள் பற்றி அக்கறையுடன் இருந்தால், குடியேற்றங்கள் தொடர்பில் கரிசனை கொண்டிருந்தால், காணி சுவீகரிப்பு தொடர்பில் கவலை கொண்டிருந்தால், அவர் மேற்கு கரைக்கும், காஸாவுக்கும் ரமல்லாவுக்கும் விஜயம் செய்ய வேண்டும்.
அங்கு சென்று அவர் பெண்களிடம் பேசவேண்டும். விதவைகளிடம் பேச வேண்டும். பிள்ளைகளை இழந்தவர்களிடம் பேசவேண்டும்.
அங்கு இஸ்ரேலிய விமானங்கள் கொத்து குண்டுகளை போடுகின்றன. ரொக்கட் தாக்குதல்கள் நடத்துகின்றன.
எதிரான தீர்மானம் கொண்டு வரப்படும் என ஏன் பிரித்தானிய பிரதமர் ஏன் இஸ்ரேலை எச்சரிக்கவில்லை.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வரப்படும் என்று ஏன் அவர் கூறவில்லை. அப்படியானால் ஏன் அவர் இலங்கையை அச்சுறுத்த வேண்டும்?
இஸ்ரேல் தொடர்பில் மேற்குலக நாடுகள் இரட்டை நிலைப்பாடுகளை கொண்டுள்ளன எனவும் தயான் ஜயதிலக்க கூறியுள்ளார்.

No comments:

Post Top Ad