இரண்டாவது தடவையாக விண்வெளிக்கு குரங்கை அனுப்பியது ஈரான் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 15, 2013

இரண்டாவது தடவையாக விண்வெளிக்கு குரங்கை அனுப்பியது ஈரான் (படங்கள் இணைப்பு)


விண்வெளிக்கு ஈரான் இரண்டாவது தடவையாக குரங்கை வெற்றிகரமாக அனுப்பியது.
அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக விண்வெளி ஆய்வில் முன்னேற ஈரான் திட்டமிட்டுள்ளது.

மேலும் வருகிற 2020ம் ஆண்டில் விண்வெளிக்கு ஆட்களை அனுப்பவும் முடிவு செய்துள்ளது.
இதன் முன்னோட்டமாக விலங்குகளை அனுப்பி பரிசோதித்து வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட குரங்கு, பத்திரமாக திரும்பி வந்தது.
இதனை தொடர்ந்து இரண்டாவது தடவையாக மீண்டும் குரங்கை விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பி உள்ளது.
அக்குரங் குக்கு ‘பார்கம்’ (நல்ல அறிகுறி) என பெயரிட்டுள்ளனர்.
பஜோகெஷ் என்ற ராக்கெட் மூலம் அந்த குரங்கு விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஈரான் ஜனாதிபதி ஹசன் ரப்பானி தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆனால் எப்போது, எங்கு நடந்தது என்பது போன்ற விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.


No comments:

Post Top Ad