ஷியாம் கொலை சாட்சி விரலடையாளம் ரவிந்துவின் விரலடையாளத்துடன் பொருந்தவில்லை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 25, 2013

ஷியாம் கொலை சாட்சி விரலடையாளம் ரவிந்துவின் விரலடையாளத்துடன் பொருந்தவில்லை


பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்ட வாகனத்தில் காணப்பட்ட விரலடையாளதுடன் ரவிந்து வாஸ் குணவர்தனவின் விரலடையாளம் பொருந்தவில்லை என விரலடையாள நிபுணர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
குற்றப்புலனாய்வு பிரிவினர் தமது விசாரணைகளைத் தொடர்பதால் சந்தேகநபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி முனசிங்க நீதவானிடம் கோட்டுக்கொண்டார்.
இதனையடுத்து சந்தேகநபரை ஜனவரி 6 ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஏ.எம். சஹாப்தீன் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
ரவிந்து வாஸ் குணவர்தன இந்த கொலையின் பிரதான சந்தேகநபரான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post Top Ad