சாரதி இல்லாமல் தானாகவே பயணித்த ரயில் இதுதான் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, December 05, 2013

சாரதி இல்லாமல் தானாகவே பயணித்த ரயில் இதுதான் (படங்கள் இணைப்பு)ஆளில்லாமல் தானாகவே ரயில் என்ஜின் கொழும்பு, மாளிகாவத்தையிலிருந்து இரத்மலானை நோக்கிப் பயணம் செய்துள்ளது.
இன்று அதிகாலை 1.30 அளவில் இந்த சம்வம் இடம்பெற்றுள்ளது.
ரயில் என்ஜின் சாரதியின் உதவியின்றி குறித்த இயந்திரத் தொகுதி தானாகவே இவ்வாறு இரத்மலானை நோக்கிப் பயணித்துள்ளது.
இடையில் எந்தவொரு இரயிலும் வாராத காரணத்தினாலும் மக்கள் நடமாடாத காரணத்தினாலும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை.
எவ்வித பாதிப்பும் இன்றி இரத்மலானை ரயில் நிலைய அதிகாரிகள் குறித்த ரயில் இயந்திரத் தொகுதியை நிறுத்தியுள்ளனர்.
இன்று அதிகாலை குறித்த ரயில் மணிக்கு ஐந்து கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்துள்ளது.
கொழும்பிலிருந்து சென்றவர்கள் குறித்த ரயில் இயந்திரத் தொகுதியை நிறுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ரயில் என்ஜின் சுயமாக பயணித்த சம்பவம் தொடர்பில் சாரதியும் உதவியாளரும் தற்காலிக பணிநீக்கம்
மாளிகாவத்தையில் இருந்து இரத்மலானை வரை ரயில் என்ஜின் சாரதியின்றி சுயமாக சென்றமை தொடர்பில் அந்த ரயில் என்ஜின் சாரதியும் உதவியாளரும் தற்காலிமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ரயில் என்ஜின் இன்று காலை 2.30 அளவில் இரத்மலானை நோக்கி பயணித்துள்ளது. இந்த என்ஜின் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரயில் பெட்டிகளை எடுத்து வருவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
சாரதியின்றி ரயில் பயணம் செய்வதை அறிந்து கொண்ட அதிகாரி அது பாதுகாப்பாக இரத்மலானை வரை செல்லும் திட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

No comments:

Post Top Ad