மூதூர் தபாலக சந்தியிலிருந்து பெரிய பாலம் வரையிலான சந்தை வீதி காபட் இட்டு புனரமைக்கும் வேலைத்திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, December 28, 2013

மூதூர் தபாலக சந்தியிலிருந்து பெரிய பாலம் வரையிலான சந்தை வீதி காபட் இட்டு புனரமைக்கும் வேலைத்திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பம் (படங்கள் இணைப்பு)


(மூதூர் முறாசில்)

மூதூர் தபாலக சந்தியிலிருந்து பெரிய பாலம் வரையிலான  சந்தை வீதி மற்றும் அரபுக்கல்லூரி வீதி ஆகியவற்றை காபட் இட்டு புனரமைக்கும் வேலைத்திட்டம் நேற்று வெள்ளிக் கிழமை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இதன்போது வேலைத்திட்டம் சம்பந்தமான பெயர் பலகைகையை  கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத்,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.தௌபீக் ஆகியோர்    திரைநீக்கம் செய்து வைத்தனர்.

இந்நிகழ்வை ஒட்டி மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ் தலைமையில்  ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில்  கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத்,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.தௌபீக்,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர்,மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான பி.ரி.எம். பைசர்,ஆப்தீன், நிஸ்மி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post Top Ad