இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் நிறுவுவதை பொதுபல சேனா ஆதரிக்கிறதாம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 03, 2013

இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் நிறுவுவதை பொதுபல சேனா ஆதரிக்கிறதாம்

(tm)

இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் நிறுவுவதை ஆதரிப்பதாக பொதுபல சேனா இன்று செவ்வாய்க்கிழமை கூறியது. இதன் மூலம் இலங்கையின் பணம் நாட்டுக்கு வெளியே கொண்டு செல்லப்படுவதை தடுக்க முடியுமென அந்த அமைப்பு கூறியுள்ளது.


நாட்டுக்கு நன்மையளிக்கும் விடயங்களை மக்கள் விடுதலை முன்னனி போன்ற மக்கள் அல்லது நிறுவனங்களை தடுப்பதை நாம் அநுமதிக்கப் போவதில்லை என பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அட்ட ஞானசர தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதனால் பணத்தை மீதப்படுத்த முடிவது மட்டுமன்றி சமூகம் கட்டுக்கோப்பை இழப்பதையும் தடுக்க முடியுமென அவர் கூறினார்.

வெளிநாட்டுக்கு படிக்கச் செல்லும் சில மாணவர்கள் நாடு திரும்புவதில்லை அவர்களது குடும்பமும் நாடும் அவர்களை இழக்க நேரிடுகின்றது என தெரிவித்தார்.

கல்வி முறமைபற்றி மக்கள் அபிப்பிராயத்தை திரட்டுவதற்கு பொது அரங்கங்களை தொடங்கப்போவதாக தேரர் கூறினார்.

தற்போதைய கல்விமுறை சமூகத்துக்கு பொருத்தமானதாக இல்லை என்றும் கல்விமுறை சிதைகின்றது என அவர் கூறினார்.

No comments:

Post Top Ad