தமிழ்-முஸ்லிம் உறவை பிரிக்க பேரினவாதிகளும்,தேசியவாதிகளும் முயற்சி ! நிஸாம் காரியப்பர் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 24, 2013

தமிழ்-முஸ்லிம் உறவை பிரிக்க பேரினவாதிகளும்,தேசியவாதிகளும் முயற்சி ! நிஸாம் காரியப்பர்

(mp)

கல்முனை தமிழ் உப - பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விவகாரம் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் சில பேரினவாத சக்திகளினாலும் தேசியவாதிகளாலும் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்ற ஒரு சதி நடவடிக்கையாகும் என கல்முனை மாநகர முதல்வர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.


இந்த விடயம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், 'பேரினவாதிகள் பின்னணியாக இருந்து கொண்டு செயற்படுத்தும் கல்முனை தமிழ் உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்கின்ற விடயத்தில் இரு சமூகங்களும் மிகக் கவனமாக செயற்பட வேண்டும்.
 
விசேடமாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இருந்து வருகின்ற நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கிலேயே சில பேரின சக்திகள் இதனைத் தூண்டியிருப்பதாக நான் கருதுகின்றேன்.

உண்மையில் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பிலான எந்தவொரு தீர்மானத்தையும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் தமிழ் தேசியக் கூட்டமைப்பும்மேல் மட்டத்திலும் கீழ் மட்டத்திலும் சுமுகமாக பேசித் தீர்வுகாண வேண்டும்.

இந்த விடயத்தை வைத்து இரண்டு தரப்பினருக்கும் இடையிலான உறவை சீர்குலைப்பதற்கு மேற்கொள்ளப்படும் சதி வலையில் யாரும் வீழ்ந்து விடக்கூடாது என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

மேலும் இது தமிழ் பேசும் சமூகத்தினரின் பலத்தை உடைத்தெறிவதற்கான ஒரு சதித் திட்டமாகும் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டியுள்ளது.

எதிர்காலத்தில் வடக்குகிழக்கு மாகாணங்களில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஒற்றுமையுடன் செயற்படுவதற்கும் கிழக்கு மாகாணத்தில் ஒன்றிணைந்து ஆட்சி செய்வதற்குமான வாய்ப்பை இல்லாதொழிக்கும் ஒரு சதித் திட்டமாகவும் இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

அத்துடன் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக இரு சமூகங்களும் தமக்குள் ஒன்றுபட்டு குரல் எழுப்புவதற்கான சூழ்நிலை உருவாகவேண்டும்எனவும் கூறிள்ளார்.

No comments:

Post Top Ad