டெங்கு நோய் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களில் பங்குபற்றியோரை கௌரவிக்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, December 21, 2013

டெங்கு நோய் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களில் பங்குபற்றியோரை கௌரவிக்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு)


டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு வேலைத் திட்டங்களில் பங்குபற்றிய சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் சுகாதாரப் பிரிவு தொண்டர்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கௌரவிப்பு-

(படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் காத்தான்குடி பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு வேலைத் திட்டங்களில் பங்குபற்றிய காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் சுகாதாரப் பிரிவு தொண்டர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.


காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யு.எல்.நஸீர்தீன் தலைமையில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னääஸ்ääஸ்ரீ.மு.கா காத்தான்குடி நகர சபை உறுப்பினரும்ääபெண்களுக்கும் வழுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியுமான சல்மா அமீர் ஹம்ஸாää காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் ஹாரிஸ் ஜேபிääகாத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள்ääபொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான றபீக்ääறஹ்மதுல்லாஹ் உட்பட பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ää சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் சுகாதாரப் பிரிவு தொண்டர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இதன் போது அதிதிகளினால் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் சுகாதாரப் பிரிவு தொண்டர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதுடன் ääசமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்திற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் குடி நீர் தாங்கியும் அவ் அமைப்பின் தலைவர் ஹாரிஸ் ஜேபியிடம் அன்பளிப்பு செய்யப்பட்டது.

குறித்த சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப்பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.No comments:

Post Top Ad