மட்டு. மாநகர சபை பொதுச்சந்தைக்கு நவீன கட்டடத் தொகுதி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 31, 2013

மட்டு. மாநகர சபை பொதுச்சந்தைக்கு நவீன கட்டடத் தொகுதி


மட்டக்களப்பு மாநகர சபை பொதுச்சந்தைக்கு நவீன வர்த்தக நிலையங்களை கொண்ட கட்டடத் தொகுதி ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
 
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
 
மகிந்த சிந்தனையின் கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் இதற்கென சுமார் 40 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
 
இந்த நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மாநகரசபையின் பிரதி ஆணையாளர் தனஞ்செயன், கணக்காளர் மற்றும் மாநகரசபை ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

No comments:

Post Top Ad