“ தெவனகலை புனித பூமியிலிருந்து முஸ்லிம்களை விரட்டியடிப்போம் ” இனவாதிகளின் வாசகங்கள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 01, 2013

“ தெவனகலை புனித பூமியிலிருந்து முஸ்லிம்களை விரட்டியடிப்போம் ” இனவாதிகளின் வாசகங்கள்


தெவனகலை பெளத்தர்களின் புனித பூமி இந்தக் குன்றினைச் சுற்றி வாழும் முஸ்லிம்கள் இந்த புனித பூமியை ஆக்கிரமித்தவர்கள். சூழவுள்ள முஸ்லிம்களை தெவனகலையிலிருந்து விரட்டியடிப்போம். அத்ற்கு பதிலாக பெளத்தர்களை குடியேற்றுவோம்”  மேற்குறிப்பிட்ட சுலோகங்கள் கடந்த 5,6 மாத காலமாக இனவாதிகளால் ஜபிக்கப்படும் வாசகங்களாகும்.

தெவனகலை குன்றில் அமைந்துள்ள் விகாரையில் “மைத்ரி சஹன பதனம ” எனும் அமைப்பினால் கடந்த ஜூலை மாதம் 14 ம்திகதி மலை 3 மணியள்வில் நடாத்தப்பட்ட பொதுக்கூட்டததில் மேற்குறிப்பிட்ட விஷக்கருத்துககள் மட்டுமன்றி அல்லாஹ்தஆலாவை இம்சித்தும் கண்மணி ரஸூல் ( ஸல்)அவர்களை தூசித்தும் “புத்திக டயஸ்” என்பவன் ஒலிபெருக்கியை உபயோகித்து உரை நிகழ்த்தியதை சூழவுள்ள முஸ்லிம் ,முஸ்லிமல்லாத மககள் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பலரின் முயற்சியினால் ஜனாதிபதியின் பனிப்பின் பேரில் சப்ரகமுவ முதலமைச்சர் ஊடாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் விசாரனை நடாத்தப்பட்டு தெவனகல குன்று சம்பந்தமான வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ம் திகதி மவனெல்லை நீதிமன்ரத்தில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ் வழக்கில் ‘அனுர மஞ்சனாயக ‘ எனும் கலிகமுவ பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவனுக்கும் ” புத்திக டயஸ்” எனும் இனவாதக் கயவனுக்கும் எதிராக மாவனல்லை நீதிமன்றில் பொலீசாரினால் வழக்குத் தொடரப்பட்டு இவர்கள் இருவருக்கும் தெவனகலைக்குப் பிரவேசிப்பதும் தடை விதிக்கப்பட்டது.
அதேவேளை கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ம் திகதி பிற்பகல் ஜனாதிபதி அவர்கள் மாவனல்லை உதுவன்கந்த பிரதேசத்தில் நடந்த வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு திரும்பி வரும் வழியில் ஜனாதிபதி அவர்கள வந்த வாகனத்தை மறைத்து சிங்கலராவய குழுவினரால் தெவனகல விடயம் சம்பந்தமான மகஜர் ஒன்ரை கையளித்திருந்தனார்.

No comments:

Post Top Ad