மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிய தடை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 01, 2013

மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிய தடை


முஸ்லிம் மாணவிகள் முகத்தை மூடும் வகையில் நிகாப் அணிவதை மொறட்டுவ பல்கலைக்கழகம் தடை செய்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தடையை விதித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் ஏ.கே.டப்ளியூ. ஜெயவர்தன தெரிவித்தார்.

இரண்டு முஸ்லிம் மாணவிகள் கண்கள் மட்டும் தெரியும் வகையில் முகத்தை மூடிக்கொள்ள அனுமதி கோரினர்.
எனினும் பாதுகாப்பு விடயங்கள் இருப்பதால் அதற்கு அனுமதி வழங்க முடியாது என மாணவிகளுக்கு அறிவிக்கப்பட்டது. முகத்தை மூடிக் கொண்டு குற்றவாளிகள் பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிக்கக் கூடும் என்பதால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பல்கலைக்கழக நிர்வாகத்துடன் கலந்துரையாடிய பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. முகத்தை தவிர தலை உட்பட உடலில் ஏனைய இடங்கள் மறையும் வகையில் ஆடைகளை அணிய முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post Top Ad