அகில இலங்கை ரீதியில் A/L பரீட்சையில் அதிகூடிய புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி பரிசில்கள் வழங்கி கௌரவிப்பு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 23, 2013

அகில இலங்கை ரீதியில் A/L பரீட்சையில் அதிகூடிய புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி பரிசில்கள் வழங்கி கௌரவிப்பு (படங்கள் இணைப்பு)


இம்முறை க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் அதி உயர்ந்த புள்ளிகள் பெற்ற மாணவர்கள் இன்று (23) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பரிசளித்து கௌரவிக்கப்பட்டனர்.
 
 
உயிரியல், பௌதீகம், வர்த்தகம், கலை மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் அதிக புள்ளிகளைப் பெற்ற ஐந்து மணவர்களைப் பாராட்டி ஜனாதிபதி பரிசு வழங்கினார்.
 
 
இந்த மாணவர்கள் ஒவ்வொருவருக்கம் தலா ஒரு லட்சம் ரூபாவுக்கான காசோலையை மக்கள் வங்கியின் சார்பில் ஜனாதிபதி வழங்கினார். அத்தடன் ஒவ்வொருவருக்கும் மடிக் கணனிகளும் வழங்கப்பட்டன.
 
 
இது தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன, மக்கள் வங்கி உயர் அதிகாரிகள் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். 
No comments:

Post Top Ad