மட்டக்களப்பில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 98 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 16, 2013

மட்டக்களப்பில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 98 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(nf)
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் இந்த வருடம் மதுபோதையில் வாகனம் செலுத்திய 98 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவினர் மேற்கொண்ட சோதனைகளின்போது, இவர்கள் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த 98 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சிலரின் சாரதி அனுமதிப் பத்திரங்கள் இரத்துச்செய்யப்பட்டதுடன், மேலும் சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இதேவேளை, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் இவ்வருடம் 56 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

No comments:

Post Top Ad