80 இலட்சம் ரூபாய் செலவில் மூன்று வைத்திய பிரிவுகள் காத்தான்குடி தள வைத்தியசாலையில் திறந்து வைப்பு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 23, 2013

80 இலட்சம் ரூபாய் செலவில் மூன்று வைத்திய பிரிவுகள் காத்தான்குடி தள வைத்தியசாலையில் திறந்து வைப்பு (படங்கள் இணைப்பு)


80 இலட்சம் ரூபாய் செலவில் நவீன வைத்திய சாதனங்களுடன் விபத்து மற்றும் காயங்கள் சிகிச்சைப் பிரிவு உட்பட மூன்று வைத்திய பிரிவுகள் காத்தான்குடி தள வைத்தியசாலையில் திறந்து வைப்பு-
(படங்கள் இணைப்பு)

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட வேலைத் திட்டத்தின் கீழ் இலங்கை சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார திணைக்களத்தின் வழிகாட்டலில் சுமார் 80 இலட்சம் ரூபாய் செலவில் மட்டக்களப்பு-காத்தான்குடி தள வைத்தியசாலையில் முதற்தடவையாக நோயாளிகளின் நன்மை கருதி நவீன வைத்திய சாதனங்களுடன் அமைக்கப்பட்ட விபத்து மற்றும் காயங்கள் சிகிச்சைப் பிரிவுääமத்திய கிருமி நீக்கல் வழங்கல் பிரிவுääவைத்தியசாலை துணிகள் வழங்கல் பிரிவு என்பன மூன்று வைத்திய பிரிவுகளை திறந்து வைக்கும் நிகழ்வு 22-12-2013 நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.


இதன் போது வைத்தியசாலையின் மூன்று பிரிவுகள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்ää கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சு10ர் ஆகியோரினால் உத்தியோகபூர்வமாக நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி தள வைத்தியாலை  வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்ääபொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்ääகிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சு10ர் ஆகியோர் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்ääகாத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்ääகாதி நீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி)ää மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் டாக்டர் சதுர்முகம் ääபிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யு.எல்.நஸீர்தீன் ää காத்தான்குடி தள வைத்தியாலை  அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் நிஹாஜ் உட்பட உலமாக்கள் .இராணுவ அதிகாரிகள்ääஊர் பிரமுகர்கள்ääபுத்திஜீவிகள்ää காத்தான்குடி வைத்தியசாலை வைத்தியர்கள்ääவைத்திய தாதிகள்ää வைத்திய ஊழியர்களääஅபிவிருத்திச் சங்க ஊழியர்கள்; என பலரும் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீரின் முயற்சியினால் நேற்று திறந்து வைக்கப்பட்ட இவ் மூன்று பிரிவுகளுக்கும்  நிதி உதவிகளை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்ääகிழக்கு மகாண சுகாதார அமைச்சுääமட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைääகாத்தான்குடி வாழ் மக்கள் ஆகியோர் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இவ் வைத்தியசாலையில் குறித்த  மூன்று பிரிவுகள் திறக்கப்பட்டுள்ளதால் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள மக்களும் அதனை அண்டியுள்ள ஆரையம்பதிää பாலமுனைää கர்பலாääகாங்கேயனோடைää ஒள்ளிக்குளம்ääசிகரம் ஆகிய கிராம மக்களும் பெரிதும் நன்மையடையவுள்ளதுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் செய்யக்கூடிய சில வைத்திய சேவைகளை நவீன வைத்திய சாதனங்களுடன் இங்கு செய்ய முடியும் என்பதும் குறிபிடத்தக்கது.

No comments:

Post Top Ad