அங்கோலாவில் 78 மஸ்ஜித்துக்கள் மூடப்பட்டுள்ளது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 01, 2013

அங்கோலாவில் 78 மஸ்ஜித்துக்கள் மூடப்பட்டுள்ளது


ஆபிரிக்க நாடான அங்கோலாவில் இதுவரை  78 மஸ்ஜித்துக்கள் மூடப்பட்டுள்ளதாக ”அங்கோலா இஸ்லாமிய அமைப்பின் ”( The Islamic Community of Angola (ICA) ) தலைவர் டேவிட் ஜாதெரிவித்துள்ளார் . மேலும் அவர் தெரிவித்துள்ள தகவலில் கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம்
அங்கோலா அரசாங்கம் மஸ்ஜிதுக்களை மூடிவருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் எட்டு மஸ்ஜித்துக்கள் அழிக்கப் பட்டுள்ளது. அங்கோலா தலைநகரில் மஸ்ஜிதுக்கள் இயங்குகின்றன அதனை மூடுவதற்கு முயற்சிக்கப் பட்டது ஆனால் தற்போது அரசுக்கு ஏற்பட்டுள்ள  அழுத்தம் காரணமாக அந்த நடவடிக்கை கைவிடப் பட்டுள்ளது .

மேலும்  டேவிட்ஜா தெரிவித்துள்ளதாவது ,  “நாங்கள் இஸ்லாம்  அங்கோலாவில்  தடை செய்யப்பட்டுள்ளது என்று சொல்ல முடியும் . ஒரு மதமாக அங்கீகரிக்கப்பட்ட  100,000 பேர் வேண்டும் அல்லது அதிகாரப்பூர்வமாக நீங்கள் தொழுகையில் ஈடுபட முடியாது என்ற நிலைதான் உள்ளது என்று தெரிவித்துள்ளார் .
அதேவேளை இஸ்லாத்தை ‘அங்கோலா அரசு தடைசெய்ய விலை. முஸ்லிம்களை அடக்குமுறைக்கு உட்படுத்த வில்லை எமது கருத்துக்களை அங்கோலா இஸ்லாமிய சமூகம் தவறாக புரிந்துகொண்டுள்ளது என்று அங்கோலா வெளிநாட்டு அமைச்சர் ஜோர்ச் சிகோடி தெரிவித்திருந்தார்  அதனையும்   ”அங்கோலா இஸ்லாமிய அமைப்பின் ” தலைவர் ஜா மறுத்துள்ளார் .
ஜா,  தெரிவித்துள்ள தகவலில் , நாட்டில் உள்ள சுமார் 90 000 முஸ்லிம்கள் அடக்குமுறையை உணர்கின்றனர். சட்டம் தொடர்பாக அரசாங்கத்தின்  வாதம்    “இஸ்லாத்தை தடை செய்ய மேற்கொள்ளப் படும்   சதித்திட்டம்”  என்று தெரிவித்துள்ளார் .
அங்கோலாவின் தற்போதைய சட்டத்தின் பிரகாரம் ஒரு சமய குழு 100,000 க்கும் அதிகமான உறுப்பினர்களை 18 மாகாணங்களில் 12 கொண்டிருக்க வேண்டும் அப்படி  கொண்டிருந்தால்  மட்டுமே   அந்த மதக்  குழு நாட்டில் சட்ட அங்கீகாரத்தை பெறமுடியும் பாடசாலைகள் மற்றும் வழிபாட்டு இடங்களை  கட்ட அனுமதியை பெறமுடியும்
அதேவேளை அங்கோலா வெளிநாட்டு அமைச்சர்  ஜோர்ச் சிகோடி மேலும் தெரிவித்துள்ள தகவலில் தாம்  முஸ்லிம் அமைப்புக்கள், நிறுவங்கள் விண்ணப்பித்துள்ள சட்ட பதிவுகளுக்கான விண்ணப்பங்களை நிராகரித்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார் , வெளிநாடுகளில் இருந்து வரும் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் , பல முஸ்லிம்கள் வணிக களஞ்சியசாலைகளுக்கு அனுமதி பெற்று அதனை மஸ்ஜித்தாக பயன்படுதுகிறார்கள்   மஸ்ஜிதுக்கள் நாட்டின் சட்டத்துக்கு அமைவாக கட்டப்படவில்லை ,
அங்கோலாவுக்குள்  சட்டவிரோதமாக  நுழைந்த  முஸ்லிம்கள் ஒரு பெரிய எண்ணிக்கை  உள்ளது,  அவர்கள் அவர்களின் வர்த்தக இடங்களை தங்களது மதவழிபாடு தலமாக மாற்றுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
“நீதி மற்றும் மனித உரிமைகள் அமைச்சு இஸ்லாத்தின் சட்ட பூர்வ தன்மையை அங்கீகரிக்காது. அவர்களது பள்ளிவாசல்கள் மேலதிக அறிவிப்பு வரை மூடப்படும்” என்று அங்கோலாவின் கலாசார அமைச்சர் ரொசா க்ரூஸ் இ சில்வா ‘இகொபின்’ என்ற செய்திச் சேவைக்கு தகவல் அளித்திருந்தார்.   என்பது குறிப்பிடத்தக்கது .
அதேவேளை முகத் திரை அணியும் முஸ்லிம் பெண்கள் கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொள்வதாகவும் உடலியல் ரீதியான தாக்குதலுக்கும் உள்ளகியுள்ளதாகவும் ஜா தெரிவித்துள்ளார் .
சுமார் 16 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அங்கோலாவில் 55 வீதமானோர் கத்தோலிக்கர்கள் என கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தரவுப்படி அங்கு 25 வீதத்தினர் ஆபிரிக்க கிறிஸ்தவ பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் 10 வீதத்தினர் புரடஸ்டான்ட் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் 5 வீதமானோர் பிரேஸில் இவன்ஜலிகஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள்,  என்றும்   90,000  முஸ்லிம்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
courtsy lankamuslim

No comments:

Post Top Ad