4 உதைபந்தாட்ட மைதானங்களின் நீளத்தில் கட்டாரின் தேசிய கொடி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, December 19, 2013

4 உதைபந்தாட்ட மைதானங்களின் நீளத்தில் கட்டாரின் தேசிய கொடி


(vi)
கட்டாரானது அதனது தேசிய தினத்தை குறிக்கும் வகையில் உலகிலேயே மிகப்பெரிய தேசியக்கொடியை உருவாக்கியுள்ளது.


டோஹாவின் வடக்கேயுள்ள தொழிற்றுறை வலயத்தில் 101,978 சதுர மீற்றர் பரப்பளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தேசியக்கொடி 4 உதைப்பந்தாட்ட மைதானங்களின் அளவானதாகும்.
3 விமானங்களில் எடுத்து வரப்பட்ட துணியை தைத்து இந்த 9.8 தொன் நிறையுடைய கொடி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடி கடந்த மே மாதம் ரோமானியாவால் உருவாக்கப்பட்ட 79,000 சதுர மீற்றர் அளவான கொடியால் நிறைவேற்றப்பட்ட உலக சாதனையை முறியடித்துள்ளது.
மேற்படி கொடியை உலகின் மிகவும் பெரிய தேசிய கொடியாக கின்னஸ் உலக சாதனை பதிவேட்டு அதிகாரிகள் அங்கீகரித்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை கட்டார் தேசிய தின நிகழ்வுக்காக காட்சியளிக்கப்பட்ட இந்தக் கொடி மீள் சுழற்சிக்குட்படுத்தப்பட்டு 200,000 பாடசாலை பைகளாக மாற்றப்பட்டு 60 நாடுகளைச் சேர்ந்த பாடசாலை சிறுவர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

No comments:

Post Top Ad