கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து சம்மாந்துறைக்கு 450 ரூபாய் சாதாரண கட்டணத்தில் இ.போ.ச. இரவு நேர அரை சொகுசு பஸ் சேவை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, December 28, 2013

கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து சம்மாந்துறைக்கு 450 ரூபாய் சாதாரண கட்டணத்தில் இ.போ.ச. இரவு நேர அரை சொகுசு பஸ் சேவை(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் இலங்கை போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் வழிகாட்டலில் கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து  சாதாரண கட்டணத்தில் சேவையில் ஈடுபடும் சம்மாந்துறை பஸ் டிப்போவுக்குச் சொந்தமான கொழும்பு-சம்மாந்துறை இரவு நேர அரை சொகுசு பஸ் சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்துமாறு  இலங்கை போக்குரத்து சபையின் சம்மாந்துறை பஸ் டிப்போ முகாமையாளர் யூசுப் லெப்பை முஹம்மட் தாஸிம் தெரிவித்தார்.


இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர் நஸீர் ää கிழக்குப் பிராந்திய செயலாற்று முகாமையாளர் கனகசுந்தரம் ஆகியோரின் முயற்சியின் பயனாக இப் பஸ் சேவை சுமார் 1 மாதமாக சேவையில் ஈடுபடுவதாகவும் கொழும்பில் இருந்து சம்மாந்துறைக்கும் - சம்மாந்துறையில் இருந்து கொழும்புக்கும் -சாதாரண கட்டணமாக ரூபாய் 450 ரூபாய் மட்டுமே அறவிடப்படுவதாகவும் சம்மாந்துறைக்கும் - கொழும்புக்கும்  மிகவும் குறுகிய நேரத்தில் சென்றடைவதற்கு இப் பஸ் சேவை பெரிதும் உதவுவதாகவும்; சம்மாந்துறை பஸ் டிப்போ முகாமையாளர் யூசுப் லெப்பை முஹம்மட் தாஸிம் மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்

குறித்த பஸ் சேவை தினமும் இரவு 8.00 மணிக்கு சம்மாந்துறை பஸ் டிப்போவிலிருந்து புறப்பட்டு அதிகாலை 4.15 மணிக்கு கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்தை சென்றடைவதாகவும் - கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.30 மணிக்கு சம்மாந்துறை பஸ் டிப்போவை வந்தடைவதாகவும் கொழும்பில் இருந்து கல்முனை ääசம்மாந்துறை வரும் பொது மக்களின் நலன் கருதி சாதாரண கட்டணத்தில் இப் பஸ் சேவையில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு-காத்தான்குடிääகல்முனைääசம்மாந்துறை ஆகிய தூர இடங்களுக்கு செல்லும் பிரயாணிகளும்  சம்மாந்துறையிலிருந்து கொழும்பு-குருநாகல்ääநிட்டம்புவ உள்ளிட்ட தூர இடங்களுக்கு செல்லும் பிரயாணிகளும்  ஆசனங்களை பதிவு செய்ய வேண்டுமானால் சம்மாந்துறை பஸ் டிப்போ -0672260281ää சம்மாந்துறை பஸ் டிப்போ முகாமையாளர் 0771058320 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தங்களுடைய ஆசனங்களை பதிவு செய்ய முடியும் எனவும் சம்மாந்துறை பஸ் டிப்போ முகாமையாளர் யூசுப் லெப்பை முஹம்மட் தாஸிம் மேலும் குறிப்பிட்டார்.

குறித்த பஸ் சேவையில் சம்மாந்துறை ääகாரைதீவுääசாய்ந்தமருதுääகல்முனைääமருதமுனைääகல்லாறுää           பெரியகல்லாறுääஓந்தாச்சிமடம்ääசெட்டிபாளயம்ääகளுவாஞ்சிக்குடிää கிரான்குளம் ஆரையம்பதி ääகாத்தான்குடி ääமட்டக்களப்புää ஏறாவூர்ääசெங்கலடி ääஓட்டமாவடி ääவாழைச்சேனைääரிதிதென்னைääபுனானைääவெலிகந்தை ääசெவணப்பிடிய ääமண்ணம்பிட்டிய பொலனறுவைääஹபறனைääதம்புள்ளைääகலேவல ääமெல்சிறிபுர இப்பாகமுகääகுருநாகல்ääபொதுஹரääபொல்கஹவலääஅளவ்வääவரகாபொலääநிட்டம்புவääகடவத்தைääகிரபத்கொடை ääகொழும்பு போன்ற இடங்களுக்கு செல்லும் பிரயாணிகள் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad