42 தமிழ்-முஸ்லிம் வளவாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 16, 2013

42 தமிழ்-முஸ்லிம் வளவாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மஹிந்த சிந்தனை திட்டத்திற்கமைவாக உலக அறிவு கிராமத்திற்கு எனும் கருத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட நெசனல அறிவகங்களின் ஆளணி வளங்களை விருத்தி செய்யும் திட்டத்திற்கமைவாக ஐ.சி.டி.ஏ.  நிறுவனத்துடன் இணைந்து ஸ்கில்ஸ் இன்ட நெசனல் நிறுவனத்தினால் கிழக்கு மாகாணத்தில்  தெரிவு செய்யப்பட்ட 25 நெனசல கணிணி அறிவகங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அக் கணிணி அறிவகங்களின் உரிமையாளார்கள்; மற்றும் இயக்குனர்களுக்கான “இலவச திறமூல மென்பொருட்கள் மற்றும் இணையவழி ஆங்கில கற்கை நெறி கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை மட்டக்களப்பில் நடைபெற்றது.


இப் பயிற்சி நெறியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த 42 தமிழ்-முஸ்லிம் வளவாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் 15.12.2013  நேற்று ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாண  ஸ்கில்ஸ் இன்ட நெசனல நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் தமரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் அதிதிகளாக ஸ்கில்ஸ் இன்ட நெசனல நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஜெ.வீரசிங்க மற்றும் தென்கிழக்கு பழ்கலைகழக விரிவுரையாளர் டொக்டர் நவாஸ் உள்ளீட்ட ஸ்கில்ஸ் இன்ட நெசனல் நிறுவனத்தின் வட கிழக்கு மாகாண திட்ட இனைப்பாளர் வீ.முரளி கிருஷ்னா ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
No comments:

Post Top Ad