எகிப்தில் சர்வாதிகார ராணுவத்தால் 40 பெண்கள் கொலை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 01, 2013

எகிப்தில் சர்வாதிகார ராணுவத்தால் 40 பெண்கள் கொலை


எகிப்தில் சர்வாதிகார ராணுவத்தால் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


ஜூலை 3-ஆம் தேதி ராணுவ சதிப் புரட்சி மூலம் ஜனநாயக ரீதியில் எகிப்தில் முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முஹம்மது முர்ஸி வெளியேற்றப்பட்ட பிறகு நடந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டதாக எகிப்தின் அரசு சாரா அமைப்பு ஒன்று கூறுகிறது.

ராணுவ சதிப் புரட்சி நடந்த அன்றைய தினமே 250க்கு மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர். ஜூலை 19-ஆம் தேதி நைல் மாகாணத்தில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பெண்கள் கொல்லப்பட்டனர்.
போராட்டம் நடத்தியதற்காக கைதான 21 பெண்களுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றத்தின் நடவடிக்கையை ஐ.நா. மற்றும் ஆம்னஸ்டி விமர்சித்திருந்தன.

No comments:

Post Top Ad