அமெரிக்காவில் மெட்ரோ ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 02, 2013

அமெரிக்காவில் மெட்ரோ ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி (படங்கள் இணைப்பு)


அமெரிக்காவில் மெட்ரோ ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர், மேலும் 67 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நியூயார்க் அருகே ஞாயிற்றுக்கிழமை பிராங்க்ஸ் பகுதியில் உள்ள வளைவில் அந்த ரயில் திரும்பியபோது திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் அந்த ரயிலின் 8 பெட்டிகளில் 6 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு உருண்டன. குறிப்பாக ஒரு ரயில் பெட்டி, அப்பகுதியில் ஓடிக் கொண்டிருக்கும் ஹார்லம் நதிக்குள் விழுவது போன்று தொங்கியது.
விபத்து பற்றிய தகவலின்பேரில் தீயணைப்புப் படையினர் 100 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
விபத்தை தொடர்ந்து, அப்பகுதியில் தாற்காலிகமாக ரயில் சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஜூலை மாதம், இதே இடத்தில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.No comments:

Post Top Ad