3 சிறுமிகள் வீட்டினுள் பலவந்தமாக வைக்கப்பட்ட விவகாரம் விசாரணைகள் ஆரம்பம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 30, 2013

3 சிறுமிகள் வீட்டினுள் பலவந்தமாக வைக்கப்பட்ட விவகாரம் விசாரணைகள் ஆரம்பம்


(sfm)

மிட்டியாகொட – கிரிமெட்டியாவத்த – படபொல பிரதேச வீடொன்றில் பலவந்தமாக மூன்று சிறுமிகள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில், அவர்களின் பெற்றோரை கைது செய்யும் பொருட்டு காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


2 வயது 5 வயது மற்றும் 8 வயதுடைய சிறுமிகள் மூவரும் இவ்வாறு வீடென்றில் அடைந்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மீகொட காவல்துறையினர் நேற்று முன்தினம் மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், சிறுமிகளின் தாய் மற்றும் தந்தை ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, அவர்கள் சிறுமிகளை வீட்டில் வைத்து பூட்டிய நிலையில், வீட்டை விட்டு வெளியேறியதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே, குறித்த சிறுமிகள் மூவரும் பம்பலப்பிட்டி நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது கிதுலம்பிட்டிய ரூகூனு சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post Top Ad