3ந் தவணை பரீட்சைக்கு தோற்றி வகுப்பேற்றபடாமையால் மாணவர்கள் தற்கொலைக்கு முயல்கின்றனர் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, December 20, 2013

3ந் தவணை பரீட்சைக்கு தோற்றி வகுப்பேற்றபடாமையால் மாணவர்கள் தற்கொலைக்கு முயல்கின்றனர்


மூன்றாம் தவணைப் பரீட்சைக்கு தோற்றிய அதிக மாணவர்கள் இம்முறை காத்தான்குடிப் பிரதேச பாடசாலைகளில் வகுப்பேற்றப்படாமையினால் தற்கொலைக்கும் முயன்று வருகின்றனர்- முன்னாள் ஸ்ரீ.ல.மு.கா மட்டு மாநகர சபை உறுப்பினர் றம்ழான்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மூன்றாம் தவணைப் பரீட்சைக்கு தோற்றிய அதிக மாணவர்கள் இம்முறை காத்தான்குடிப் பிரதேச பாடசாலைகளில் வகுப்பேற்றப்படாமையினால் மாணவர்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதோடு தற்கொலைக்கும் முயன்று வருகின்றனர் என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் மூன்றாம் தவணைப் பரீட்சைக்கு தோற்றி குறைந்த புள்ளிகளைப் பெற்ற அதிகமான மாணவர்கள் இம்முறை வகுப்பேற்றப்படவில்லை இதனால் அதிகமானமாணவர்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதோடு தற்கொலைக்கும் முயன்று வருகின்றனர்.

அவ்வாறு காத்தான்குடி பிரதேச பாடசாலை ஒன்றில் குறைந்த புள்ளியைப்  பெற்ற மாணவி ஒருவர் வகுப்பேற்றப்படாதா காரணத்தால்உளரீதியாக பாதிக்கப்பட்டுதற்கொலைக்கு முயன்றுள்ளார்பின்னர் அவர் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் இதுபோன்று வகுப்பேற்றப்படாத இன்னும் சில மாணவ மாணவிகள் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் அறிய முடிகின்றது.

காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள அதிகமான பாடசாலைகளில் மிகக்கூடுதலான மாணவர்கள் இவ்வாறு வகுப்பேற்றப்படாமல் இருந்து வருகின்றனர் அவ்வாறு வகுப்பேற்றப்படாத மாணவர்கள் சிலர் தங்களை வகுப்பேற்றுமாறும் எதிர் வரும் காலங்களில் தாங்கள் சிறப்பாக கல்வி கற்று அதிகூடிய புள்ளிகளை பெற்றுக்காட்டுவதாக தெரிவித்து பாடசாலைகளின் அதிபர்களின் கால்களைப் பிடித்து அழுது புலம்பியபோதிலும் அம்மாணவர்கள் வகுப்பேற்றப்படவில்லை எனவும் அறிய முடிகின்றது.

அத்துடன் ஒரே கல்விக் கோட்டத்தில் வௌ;வேறுபட்ட நடைமுறைகள் மாணவர்களை வகுப்பேற்றுவதில் காணப்படுகின்றது உதாரணமாக குறித்த ஒரு தரத்தில் குறைந்த புள்ளியைப் பெற்ற மாணவர்கள்ஒரு  பாடசாலையில் வகுப்பேற்றப்பட்டும் அதே தரத்தில் அதைவிடக் கூடுதலானபுள்ளியைப் பெற்ற மாணவர்கள் இன்னுமொரு பாடசாலையில் வகுப்பேற்றப்படாமல் இருப்பதை காணமுடிகின்றது.

இதுவிடயமாக சில பாடசாலைகளின் அதிபர்களிடம் வினவிய போது ஒவ்வொரு பாடசாலையின் தரத்திற்கு ஏற்ப அந்நடைமுறை காணப்படுவதாகவும் குறைந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை வகுப்பேற்றும் பட்சத்தில்பாடசாலையின் கல்வித்தரம் குறைந்து காணப்படுகின்றதாகவும் அதனைதக்க வைத்துக்கொள்ளும் பொருட்டுகுறித்த ஒருபுள்ளி மட்டத்தினை வகுத்து அதன்படி நடைமுறைப்படுத்தி வருவதாகவும் தங்களின் பாடசாலையின் கல்வித்தரமே முக்கியம் எனவும் தெரிவித்தனர்குறிப்பிட்ட நடைமுறை எந்த கல்வி சுற்று நிரூபத்தினுடாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற வினாவுக்கு பதிலளிக்க மறுத்து விட்டனர்.

இந்த நடைமுறையினால் அதிகமான மாணவர்கள் முழுமையாக கல்வியைத் தொடராமல் இடைநடுவே நிறுத்திக் கொள்கின்றனர் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி குறித்த ஒரு வயதெல்லையை எட்டும் வரை பாடசாலைக்கு செல்ல முடியாமலும் தொழில் செய்யமுடியாமலும் வழிதவறிப் போவதை அவதானிக்க முடிகின்றது.

அவ்வாறு மாணவர்கள் சித்தியடையாமையினால் உளரீதியாக பாதிக்கப்படாமலும்சமூகத்திலிருந்து வழிதவறிச் சென்றுவிடாமல் தடுப்பதற்கும் கல்வியமைச்சும் அரசாங்கமும் எதிர் வரும் 2016ம் ஆண்டுப் பின்னர் ஐந்தாம் தரப்புலமைப் பரீட்சையை முழுமையாக இடைநிறுத்தியுள்ளது.

காத்தான்குடி கல்விக் கோட்டப் பாடசாலைகளில் மாணவர்கள் வகுப்பேற்றப்படாமை குறித்து கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரிடம் வினவிய போது ஒரு மாணவர் எந்தவொரு புள்ளியையும் பெறாமல் அவரது புள்ளி பூஜ்ஜியமாக இருந்தாலும் அவரை 1ம் தரத்திலிருந்து 11ம் தரம் வரையும் வகுப்பேற்றாமல் விட முடியாது வகுப்பேற்றியே ஆக வேண்டும் எனவும் தெரிவிக்கின்றார்

அவ்வாராயின் கல்வித் திணைக்களத்தின் சட்டத்திற்கு முரனாக பாடசாலையின் கல்வித்தரத்தை மட்டுமே நோக்காகக் கொண்டு தற்போது வகுப்பேற்றப்படாமல் அதே வகுப்பில் மீண்டும் வைத்துக் கொண்டிருக்கும் மாணவர்களை அதிபர்கள் உடனடியாக வகுப்பேற்ற வேண்டும் தவறும் பட்சத்தில் மாகாண கல்விப் பணிப்பாளர் குறித்த கல்விக் கோட்டத்திலுள்ள அதிபர்களை அழைத்து இதற்கான உத்தரவை பிரப்பிப்பதோடு இவ்வாறு கல்வித் திணைக்களத்தின் உத்தரவிற்கு எதிராக செயற்பட்ட அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்தோடு பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அதிபர்களின் கால்களில் விழுந்து அழுது புலம்ப வைத்ததோடு உள ரீதியாக பாதிப்படைய வைத்து தற்கொலைக்கு தூண்டிய அதிபர்களுக்கு எதிராக சிறுவர்களின் உரிமைக்கான அமைப்புகளிடம் முறைப்பாடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post Top Ad