சிரியா விமானப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்வு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 16, 2013

சிரியா விமானப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்வு


சிரியாவின் வர்த்தக நகரான அலெப்போ நகரம் போராளிகளின் பிடியில் உள்ளது. இப்பகுதியை குறிவைத்து நேற்று விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டன. பீப்பாயில் நிரப்பப்பட்ட குண்டுகளை கொண்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டன. 


ஒரு பீப்பாயில் நூறு கிலோவிற்கு மேலான வெடிப்பொருட்கள் வீதம் 25 பீப்பாய் குண்டுகள் அங்கு வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கட்டிடங்கள் இடிந்தன. வீதிகளில் நின்றிருந்த கார்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த தாக்குதலில் குறைந்தது 16 சிறுவர்கள் உள்பட 37 பேர் கொல்லப்பட்டனர். 

வீடுகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 

சிரியாவில் அதிபர் ஆசாத் ஆட்சிக்கு எதிராக போராளிகள் கடந்த 3 வருடங்களாக சண்டையிட்டு வருகின்றனர். இதில்  இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 10 லட்சம் பேர் அகதிகளாகியுள்ளனர் என்று மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

No comments:

Post Top Ad