பிரத்தியேக பாட வகுப்புக்களை பூர்த்தி செய்த 35 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 31, 2013

பிரத்தியேக பாட வகுப்புக்களை பூர்த்தி செய்த 35 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலா நகரில் சிறப்பாக இயங்கிவரும்  கர்பலா ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் கர்பலா கிராமத்தில் வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக தரம் 1 ஒன்று தொடக்கம் தரம் 5 ஐந்து வரை பாடசாலையில் கல்வி பயிலும் ஆரம்பப் பிரவு மாணவ மாணவிகளின் நன்மை கருதி 2013ஆம் ஆண்டு கடந்த ஒரு வருட காலமாக நடாத்தபட்ட இலவச பிரத்தியேக பாட வகுப்புக்களை பூர்த்தி செய்த 35 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 29 ஞாயிற்றுக்கிழமை மாலை கர்பலா நகரிலுள்ள அவ் அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்றது.


இதன் போது இலவச பிரத்தியேக பாட வகுப்புக்களை பூர்த்தி செய்த 35 மாணவ மாணவிகளுக்கு காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவரும்ääசிரேஷ்ட உடகவியலாளருமான மௌலவி எஸ்.எம்.முஸ்தபா (பலாஹி) மற்றும் அதிதிகளினால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் தலைவர்                எம்.எச்.ஏ. றஷீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவரும்ääசிரேஷ்ட உடகவியலாளருமான மௌலவி எஸ்.எம்.முஸ்தபா (பலாஹி) கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக கர்பலா ஜாமிஉல் மனார் ஜூம்மா பள்ளிவாயல் தலைவர் அப்துல் லத்தீப் ääஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் செயலாளர் எம்.ஐ.எம்.மபாஸ் உட்பட அதன் உறுப்பினர்கள் ääஊடகவியலாளர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இங்கு மாணவ மாணவிகளின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கலை ääகலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன்.

குறித்த கர்பலா  ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு சமூகப்பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post Top Ad