வங்கதேச எதிர்க்கட்சி போராட்டத்தில் 3 ரெயில்கள் கவிழ்ப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 04, 2013

வங்கதேச எதிர்க்கட்சி போராட்டத்தில் 3 ரெயில்கள் கவிழ்ப்பு


வங்கதேசத்தில் அடுத்த மாதம் 5-ம் தேதி பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்த தேதியை ஒத்திப்போட வேண்டும் என்று கூறி ஷேக் ஹசினா ஆட்சிக்கு எதிராக எதிர்கட்சித் தலைவர் கலிதா ஜியா தலைமையில் 18 கட்சிகள் 5 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. 


தேர்தல் தேதியை மாற்றும் வரை சாலை, ரெயில், கப்பல் போக்குவரத்துகள் இயங்கக்கூடாது என்று கூறி அவர்கள் நடத்தும் போராட்டத்தில் ஜமாத் இ இஸ்லாமி கட்சியினரும் இணைந்துள்ளனர். இவர்கள் நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் கொண்டு போலீசார் மற்றும் ஆளும் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

மேலும், சாலையில் செல்லும் வாகனங்களை அடித்து நொறுக்கியும், தீவைத்து கொளுத்தியும், ரெயில் தடங்களை புரட்டிப் போட்டும் வருகின்றனர். நாடு முழுவதும் பல இடங்களில் ரெயில்பாதைகளை தகர்க்கப்பட்டுள்ளதால், இன்று மூன்று ரெயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. 

இதில் 4 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து டாக்காவுடன் தொடர்புடைய பல ரெயில் தடங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதல் இவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

No comments:

Post Top Ad