சுனாமியை நினைவு கூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, December 26, 2013

சுனாமியை நினைவு கூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி


(nf)
இன்று காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.
சுனாமி மற்றும் பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.

ஆயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்ட, நினைத்துப்பார்க்க முடியாத அழிவினை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 09 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
இந்த மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, தேசிய பாதுகாப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இதற்கான பிரதான வைபவம் களுத்துறை மாவட்ட செயலகத்தில் பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்போது பல்வேறு தெளிவூட்டல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன் நாடுபூராகவும் உயிர் பாதுகாப்பு தொடர்பில் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்த ஒத்திகைகளும், தெளிவூட்டல்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.
வருடங்கள் கடந்தோடினாலும் ஆழிப்பேரலை அனர்த்தம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த அவலங்களும், பாதிப்புக்களும் ஏதேவொரு வகையில் இன்றும் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன.

No comments:

Post Top Ad