பயணியை தாக்கிக் கொன்ற தனியார் பஸ் நடத்துனருக்கு 2 வருட கடூழிய சிறை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, December 19, 2013

பயணியை தாக்கிக் கொன்ற தனியார் பஸ் நடத்துனருக்கு 2 வருட கடூழிய சிறை

(tm)

கொத்தட்டுவ நகரத்தில் வைத்து பயணி ஒருவரை தாக்கி கொன்றமைக்காக 175 இலக்க வழித்தட தனியார் பஸ்ஸில் நடத்துனராக கடமை புரிந்தவருக்கு இருபது வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.


2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதியே நடத்துனர் பயணியை தாக்கியுள்ளார்.குற்றம் சாட்டப்பட்ட சாமில சம்பிக்கா என்பவருக்கும் பயணியான  விஜேதாஸ என்பவருக்கும் இடையில் குறித்த தினத்தன்று வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதன்போதே நடத்துனர் பயணியை குடையால் அடித்து கொன்றதாக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேகநபரான பஸ் நடத்துனர் தனக்கு எதிரான குற்றத்தை ஒத்துக்கொண்டார். 

இதனையடுத்தே இது கை மோசக்கொலை என அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசூரிய அவருக்கு 20 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு 150இ000 ரூபா நட்டஈடு செலுத்தும்படியும் உத்தரவிட்டார்.

No comments:

Post Top Ad