26 பலஸ்தீனக் கைதிகளை இஸ்ரேல் அரசாங்கம் விடுதலை செய்தது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 31, 2013

26 பலஸ்தீனக் கைதிகளை இஸ்ரேல் அரசாங்கம் விடுதலை செய்தது


சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 பலஸ்தீனக் கைதிகளை இஸ்ரேல் அரசாங்கம் விடுதலை செய்துள்ளது.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இடம்பெறும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட இணக்கங்களின் பிரகாரம் இந்த விடுதலை இடம்பெற்றுள்ளது.
இவர்கள் கொலைக் குற்றங்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அரசியல் கைதிகளை பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையில் விடுதலை செய்யும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் இஸ்ரேல் இவர்களை விடுவித்துள்ளது.
விடுதலை செய்யப்பட்டவர்களை பலஸ்தீனுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை  தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad