25 முஸ்லிம் கலைஞர்களுக்கு கலா பூஷணம் விருது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 16, 2013

25 முஸ்லிம் கலைஞர்களுக்கு கலா பூஷணம் விருது

(vi)

கலைத் துறையில் நீண்டகாலமாகச் சேவை செய்த 60 வயதைத் தாண்டியவர்களுக்கு வழங்கப் படும் அரசின் உயர் விருதான கலா பூஷணம் விருதுவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு நவரங்கஹல மண்டபத்தில் இடம் பெற்றுள்ளது.
 
இந் நிகழ்வில் கலாச்சார அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்கா, ஏ.எச்.எம். அஸ்வர், ஹாசீம் ஒமா, எம்.எச்.எம்.சமீல் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.                                                                                  
கலாசாரத் திணைக்களத்தினால் 29 வது வருடமாக ஒழுங்கு செய்த இவ்விழாவில் 296 மூத்த கலைஞர்கள் மொத்தமாகப் பாராட்டப்பட்டுள்ளனர்.
 
வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் 70 தமிழ் கலைஞர்களும் 25 முஸ்லிம் கலைஞர்களும் 191 சிங்களக் கலைஞர்களும் பாராட்டப்பட்டதுடன் விருது மற்றும் பணப் பரிசு, சான்றிதழ் என்பன வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad