காத்தான்குடி -தஜ்வீதுல் குர் ஆன் பயிற்சிக் கலாசாலையின் 24வது வருட சான்றிதழ் வழங்கும் விழா - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 29, 2013

காத்தான்குடி -தஜ்வீதுல் குர் ஆன் பயிற்சிக் கலாசாலையின் 24வது வருட சான்றிதழ் வழங்கும் விழா


காத்தான்குடி -தஜ்வீதுல் குர் ஆன் பயிற்சிக் கலாசாலையின் 24வது வருட சான்றிதழ் வழங்கும் விழாவும் மெத்தைப்பள்ளி குர் ஆன் மத்ரஸாவில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான 2013 பரிசளிப்பு விழாவும்-


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு-காத்தான்குடி -3 முஹைத்தீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயலால் நடாத்தப்படுகின்ற தஜ்வீதுல் குர் ஆன் பயிற்சிக் கலாசாலையின் 24வது வருட சான்றிதழ் வழங்கும் விழாவும் மெத்தைப்பள்ளி குர் ஆன் மத்ரஸாவில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான 2013 பரிசளிப்பு விழாவும் 28-12-2013  சனிக்கிழமை காலை காத்தான்குடி முஹைத்தீன் மெத்தைப் பெரிய பள்ளிவாயல் மேல்மாடியில் அப் பள்ளிவாயல் தலைவரும் ääகாத்தான்குடி நகர சபை உறுப்பினருமான ஏ.எம்.எம்.றஊப் ஜேபி தலைமையில் இடம்பெற்றது.


இதன் போது தஜ்வீதுல் குர் ஆன் பயிற்சிக் கலாசாலை மாணவர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மெத்தைப்பள்ளி குர் ஆன் மத்ரஸா மாணவ மாணவிகள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் அத்தோடு       தஜ்வீதுல் குர் ஆன் பயிற்சிக் கலாசாலை மற்றும் மெத்தைப்பள்ளி குர் ஆன் மத்ரஸாவிரிவுரையாளர்கள்ää அதிபர்ääமுஅல்லிமாக்கள் அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு தஜ்வீதுல் குர் ஆன் பயிற்சிக் கலாசாலை மாணவ மாணவிகளின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் நிகழ்வின் சிறப்புரையை ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் கவிமணி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி) நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கா-குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி எம்.ஐ.ஆதம்லெப்பை (பலாஹி) கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத்ääகாத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்ää தஜ்வீதுல் குர் ஆன் பயிற்சிக் கலாசாலை பரீட்சைக்குழு உறுப்பினர் அஷ்ஷேய்க் எம்.சி.ஏ.ஜெயினுலாப்தீன் (மதனி) ää சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின்; தலைவர் இல்மி அஹமட் லெப்பைää ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் தலைவர் எம்.ஐ.எம்.முஹைதீன் ஹாஜியார் ääதஜ்வீதுல் குர் ஆன் பயிற்சிக் கலாசாலை அதிபர் எம்.பி.ஆதம்பாவாääகுர் ஆன் மத்ரசாக்கள் அபிவிருத்தி சபை பரீட்சைக்குழு உறுப்பினர் மௌலவி எச்.எம்.சாஜஹான் (பலாஹி)ääகாத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளரும்ääசிரேஷ்ட ஊடகவியலாளருமான மௌலவி முஸ்தபா (பலாஹி)ää முஹைத்தீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி ஹாலித் ஹசன் (பலாஹி) ääஅறிவிப்பாளர் ஹலீம் ääமுஹைத்தீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயல் செயலாளர் உசனார் ஜேபி உட்பட முஹைத்தீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயல் நிர்வாகிகள்ääஉலமாக்கள்ääஊர் பிரமுகர்கள்ääபெற்றோர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.No comments:

Post Top Ad