2014 புதிய தேசிய அடையாள அட்டைகளுக்கு தொப்பியோ,பா்தாவோ அனுமதிக்கப்படமாட்டாது (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, December 14, 2013

2014 புதிய தேசிய அடையாள அட்டைகளுக்கு தொப்பியோ,பா்தாவோ அனுமதிக்கப்படமாட்டாது (படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் ஆட்களைப்பதிவு செய்யும் திணைக்களத்தினால் ஏதிர்வரும் 2014 ஆண்டு ஜூன் மாதமளவில் புதிதாக வழங்கப்படவுள்ள் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம் மக்கள் அவர்களுடைய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தொப்பியோääபர்தாவோ அணிந்து ஆள் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது என ஆட்களைப்பதிவு செய்யும் திணைக்களத்தின் பொது ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்தார்.


நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு கல்லடி ஓசானிக் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் ஒருவரினால் கேட்க்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர் எதிர்வரும் 2014 ஆண்டு ஜுன் மாதத்தின் பின்னர் புதிதாக வழங்கப்படவுள்ள் இலத்திரனியல் ஆள் அடையாள அட்டை இலங்கை முழுவதும் வாழும் மக்களுக்கு ஒரே விதமானதாகவும்ää கலர் புகைப்படத்துடன் சிங்களம்ää தமிழ் மொழிகளை மாத்திரம் கொண்டு அவை அமைந்திருக்கும் எனவும்ää எந்தவொரு இனää மத கலாசாரத்தினையும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் அவை அமைந்திருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்  ஊடகவியலாளர் மகாநாட்டில் கபே மற்றும் சி.எஷ்.ஆர் நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன்ää கபே நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ.எச்.ஏ. {ஹஸைன்ää ஆட்பதிவுத் திணைக்களத்தின்  அதிகாரிகள்  ääதமிழ்-முஸ்லிம் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

2014 ஜூன் மாதமளவில் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையால் முஸ்லிம் ஆண்கள் உட்பட முஸ்லிம் மத குருமார்கள் ääமுஸ்லிம் பெண்கள் ääகிறிஸ்தவ அருட்தந்தை மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோர்; தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கு தொப்பி மற்றும் பர்தா அணிந்து போட்டோ எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad