பாலர் பாடசாலையின் 2013 கலை விழா-இலங்கை விமானப்படையின் மகளிர் அணித்தலைவி பங்கேற்பு-(படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 04, 2013

பாலர் பாடசாலையின் 2013 கலை விழா-இலங்கை விமானப்படையின் மகளிர் அணித்தலைவி பங்கேற்பு-(படங்கள் இணைப்பு)(பழுலுல்லாஹ் பர்ஹான்;)

இலங்கை விமானப்படையின் மட்டக்களப்பு விமானப்படை நிலையத்தின்; கீழ் இயங்கிவரும்; சர்வதேச பாலர் பாடசாலையின்   2013 கலை விழா  03-12-2013 நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் இடம்பெற்றது.


மட்டக்களப்பு விமானப்படையின் தள கட்டளையிடும் அதிகாரி விங்கெமாண்டர் ஜி.எஸ்.என்.பிரியதர்சன தலைமையில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக இலங்கை விமானப்படை தளபதியின் பாரியாரும்ääஇலங்கை விமானப்படையின் மகளிர் அணித்தலைவியுமான  திருமதி மீலிகா அபேவிக்ரம கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக இலங்கை விமானப்படையின் நலன்புரி அமைப்பின் பணிப்பாளர் ஏ வைஸ் மார்ஷல் எம்.எல்.கே.பெரயரா கலந்து கொண்டார்.

இதன் போது இலங்கை விமானப்படை தளபதியின் பாரியாரும்ääஇலங்கை விமானப்படையின் மகளிர் அணித்தலைவியுமான  திருமதி மீலிகா அபேவிக்ரம ääஇலங்கை விமானப்படையின் நலன்புரி அமைப்பின் பணிப்பாளர் ஏ வைஸ் மார்ஷல் எம்.எல்.கே.பெரயரா பாலர் பாடசாலை சிறுவர் சிறுமிகளுக்கு சான்றிதழும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு பாலர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கிறிஸ்தவர்களின் நத்தார் பண்டிகையை வரவேற்கும் முகமாக நத்தார் பாப்பா சிறுவர்களுடன் நடனம் ஆடும் நிகழ்வும் இங்கு இடம்பெற்றதோடு பாலர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் பிரதம அதிதியினால் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

No comments:

Post Top Ad