மூதூர் எக்சன் பெய்ம் 17 பணியாளர்கள் கொலைக் குற்றச்சாட்டை ஏற்க முடியாது ; இராணுவம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 04, 2013

மூதூர் எக்சன் பெய்ம் 17 பணியாளர்கள் கொலைக் குற்றச்சாட்டை ஏற்க முடியாது ; இராணுவம்


மூதூரில் 17 பணியாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் பிரான்ஸின் எக்சன் பெய்ம் நிறுவனம் இலங்கை இராணுவத்தின் மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளமை தொடர்பில், இராணுவத்தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கை அரசாங்கத்துடன், எவ்வித தகவல்களையும் பகிர்ந்து கொள்ளாமல் இந்த குற்றச்சாட்டை பிரான்ஸ் நிறுவனம் சுமத்தியுள்ளமையானது ஏற்றுக்கொள்ளத்தக்க செயல் அல்ல என்று இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த பிரான்ஸ் நிறுவனம் கொலை குற்றச்சாட்டை சுமத்துவதற்கு முன்னர் அதற்கான ஆதாரங்கள் இருக்குமானால் அதனை இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பித்து இலங்கையில் உள்ள நீதியின் அடிப்படையில் செயற்பட்டிருக்க முடியும்.
இதனை செய்யாது பகிரங்கமாக கொலை குற்றச்சாட்டு அறிக்கையை வெளியிடுவது தொடர்பில் தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
2006ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் திகதியன்று இலங்கையின் இராணுவம் கடற்படை மற்றும் பொலிஸாரே திருகோணமலை மூதூரில் தமது 17 பணியாளர்களையும் கொலை செய்தனர் என்று எக்சன் பெய்ம் நிறுவனம் பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளமையை அடுத்தே இராணுவம் தமது கருத்தை வெளியிட்டுள்ளது.
குறித்த 17 பணியாளர்களும் வரிசைப்படுத்தப்பட்டு முழக்காலில் இருக்க வைக்கப்பட்ட பின்னர் ஒவ்வொருவரின் தலையிலும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக எக்சன் பெய்ம் குறிப்பிட்டுள்ளது
எனினும் கொலைஞர்களை இலங்கை அரசாங்கம் பாதுகாத்து வருவதாக நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad