அட்டாளைச்சேனையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயல்வாத பிரச்சார நிகழ்வு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 04, 2013

அட்டாளைச்சேனையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயல்வாத பிரச்சார நிகழ்வு


அக்கறைப்பற்று பெண்கள் அரங்கம் ஏற்பாடு செய்த பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயல்வாத பிரச்சாரத்தின் அம்பாறை மாவட்ட நிகழ்வு நேற்று (03) அட்டாளைச்சேனையில் நடைபெற்றது. 


பெண்கள் அரங்கத்தின் தலைவி வாணி சைமன் தலைமையில் அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கூட்டமண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுசியா சேனாதிராஜா மற்றும் அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் வி.ஜெயரூபன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இங்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழித்து சமூகத்தில் கௌரவமாகவும், சுதந்திரமாகவும் பெண்கள் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை அதிதிகள் வலியுறுத்திப் பேசினார்கள். 

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கான செயல்திட்டம் அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் இதன்போது வழங்கப்பட்டது. 

மேலும், பொதுமக்களின் பார்வைக்காக வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 
No comments:

Post Top Ad