பெல்ஜியத்தில் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 04, 2013

பெல்ஜியத்தில் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து (வீடியோ இணைப்பு)


பெல்ஜியத்தில் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் ஒரே இடத்தில் கார்கள், டிரக்குகள் ஆகிய 100 வாகனங்கள் ஒரே இடத்தில் பயங்கரமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சம்பவத்தில் ஒருவர் உடல்நசுங்கி ஸ்தலத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மீட்புப்பணிகள் ஹெலிகாப்டர் உதவியுடன் நடந்து வருகின்றன.
மேற்கு பெல்ஜியம் பகுதியில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. இந்த பகுதியின் கவர்னர் மீட்புப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்.
காயம் அடைந்த 54 பேர்களில் 11 பேர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், 38 பேர்களுக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாக்வும், 5 பேர்களுக்கு படுகாயம் ஏற்பட்டதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த Kortrijk என்ற பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அங்கு போக்குவரத்தை முற்றிலும் தடை செய்த பொலிஸார், வாகன சாரதிகளை மாற்றுப்பாதையில் செல்லும்படி அறிவுறுத்தினர்.
இந்த விபத்து குறித்த புகைபடங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் கடந்த 1996 ஆம் ஆண்டு இதேபோல 100 வாகனங்கள் இந்த பகுதியில் மோதி 10 பேர் வரை பலியாகியுள்ளனர். 

No comments:

Post Top Ad