மூதூர் சந்தோசபுரத்தில் வெடிவெடித்ததில் 10 வயது சிறுவன் காயம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 29, 2013

மூதூர் சந்தோசபுரத்தில் வெடிவெடித்ததில் 10 வயது சிறுவன் காயம்

(tm)

விவசாய நிலங்களில்  ஊடுருவும் விலங்குகளை  கலைப்பதற்காக வெடியினை பயன்படுத்த முற்பட்டபோது, அந்த வெடி வெடித்ததில் சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளான். 


திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு சந்தோசபுரம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நெய்யந்தை குளத்திற்கு அருகில் உள்ள விவசாய நிலத்திலேயே நேற்று சனிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

சந்தோசபுரம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் விக்நேஸ்வரன் (வயது 10) என்ற சிறுவனே இவ்வாறு காயமடைந்துள்ளான். 

காயமடைந்த சிறுவன் உடனடியாக மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான்.  

No comments:

Post Top Ad