அட்டாளைச்சேனை 06 ஆம் பிரிவு சிவில் பாதுகாப்பு குழு ஏற்பாடு செய்த பாராட்டும் விழா (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 03, 2013

அட்டாளைச்சேனை 06 ஆம் பிரிவு சிவில் பாதுகாப்பு குழு ஏற்பாடு செய்த பாராட்டும் விழா (படங்கள் இணைப்பு)


(A.W.இர்பான்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிந்தனை ஊடாக கிராம மட்டத்தில் நடை பெறுகின்ற சமூக விரோத குற்றச் செயல்களை ஒழிப்பதற்கு உருவாக்கப்பட்ட கிராமிய சிவில் பாதுகாப்பு குழுவின் செயல்பாடு மிகவும் முக்கியத்துவமானது என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்திää நீர்ப்பாசனம்ää வீடமைப்பும் நிர்மாணமும்ää கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.


அட்டாளைச்சேனை 06 ஆம் பிரிவு சிவில் பாதுகாப்பு குழு ஏற்பாடு செய்திருந்த பாராட்டும்ää கௌரவிப்பும் மகிழ்ச்சி பெருவிழா அட்டாளைச்சேனை சேர் றாஸீக் பரீட் வீதி முன்றலில் இடம் பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அட்டாளைச்சேனை 06ஆம் பிரிவு சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவர் சலீம் றமீஸ் ஜேபி தலைமையில் இடம் பெற்ற இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ääஅக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யு.எல். ஹாஜா முகைதீன் ääஇலங்கை இளைஞர் பாராளமன்ற உறுப்பினர் யு.எல்.எம்.சபீர்ää  சம்மாந்துரை கெப்சோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.ஜே.காமில் இம்தாட்ää சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கு பொறுப்பான பொறுப்பதிகாரி சப் இன்ஸ் பெக்டர் யு.எம்.செனரத்னää இணைப்பாளர் பொலிஸ் உத்தியோகத்தர் எம்.ஐ.அப்துல்லாää 06ஆம் பிரிவு பொறுப்பாளர் பொலிஸ் சார்ஜன் ஏ.எல்.பி.முகம்மட் உட்பட அரச அதிகாரிகள் ääமுக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த வைபவத்தில் மக்கள் பணி செய்தமைக்காக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ääமாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர்ää அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறு;பபதிகாரி யு.எல்.ஹாஜா முகைதீன் ää உட்பட கலந்து கொண்ட முக்கியஸ்தர்கள் பொன்னாடை போர்த்தி ääநினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் ää05ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த 06ஆம் பிரிவு மாணவர்களுக்கும் நினைவுப் பரிசுää சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சம்மாந்துறை கெப்சோ நிறுவனத்தின் அனுசரனையுடன் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கும் ää அட்டாளைச்சேனை 06ஆம் பிரிவு சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்குமிடையில் நடைபெற்ற சினேக பூர்வமான மென் பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற 06ஆம் பிரிவு சிவில் பாதுகாப்பு குழுவுக்கு வெற்றிக் கேடயமும் பிரதம அதிதி அமைச்சர் உதுமாலெப்பை அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த வைபவத்தின் போது சிறுவர்களின் கலைää கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன்ää இக் கிராமத்தில் என்றும் இல்லாதவாறு இடம் பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்கு வருகை தந்த பிரதம அதிதி ääமற்றும் அதிதிகளை மாலையிட்டு ääபட்டாசு கொளுத்திää பாரம்பரிய பொல்லடிகளுடன் இக்கிராம பொதுமக்களால் வரவேற்று அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.No comments:

Post Top Ad