மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் N.K.றம்ழானின் கடிதம் (பிரதி இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 08, 2013

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் N.K.றம்ழானின் கடிதம் (பிரதி இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் குறித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை குழு  உறுப்பினர்  றம்ழான் மட்டு -மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதி-(பிரதி இணைப்பு)  பணிப்பாளர்,                                     NK றம்ழான் JP                                               போதனா வைத்தியசாலை                    உறுப்பினர். வைத்தியசாலைக் குழு         மட்டக்களப்பு                     போதனா வைத்தியசாலை மட்டக்களப்பு                            ஐயா,அம்மணி                                              2013 11 06      

     மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பொத்துவில் தொடக்கம் மூதூர் வரையுமுள்ள மிக அதிகமான நோயளர்கள் சிகிச்சை பெறுவதற்காக தினமும் வருகைதருகின்றனர். இருந்த போதிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாமல் தொடர்ச்சியாக காணப்பட்டு வருகின்றது. அக்குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை குழுக் கூட்டத்தில் பல தடவைகள் என்னாலும் இன்னும் சில உறுப்பினர்களாலும் பிரஸ்தாபிக்கப்பட்டு இருந்த போதிலும்  இன்று வரைக்கும் அவைகள் நிவர்த்தி செய்யப்படவில்லை அதனால் நோயாளர்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதை அவதானிக்க முடிகின்றது.

       மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பழைய கட்டிடங்களை உடைத்தல்ää பழைய கட்டிடங்களுக்கு தீந்தை (பெயின்ட் பூசுதல்) நடைபாதைகளை வடிவமைத்தல்ää மற்றும் திருத்த வேலைகள்ää மேசன் வேலைகள்ää பொருட்கள் கொள்வனவு போன்ற விடயங்களுக்கு காட்டப்படுகின்ற அக்கரையும் அவசரமும் நோயாளர்களின் கீழ்கானும் அடிப்படைத்தேவை விடயங்களிலோ சேமநலன்களிலோ காட்டப்படுவதாக காணமுடியவில்லை.

      மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரு பணிப்பாளர் இரண்டு பிரதி வைத்தியசாலைப் பணிப்பாளர்கள் கடமையாற்றுகின்ற போதிலும் வாரத்தில் ஒரு முறையேனும் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பகுதிக்கோää மருந்தகங்களுக்கோ அல்லது கிளினிக்குகள் நடைபெறும் இடங்களுக்கோ அல்லது விடுதிகளுக்கோ சமயலறைப்பக்கமோ சென்று அங்கு நோயாளர்கள் உத்தியோகத்தர்கள்ää ஊழியர்கள் எதிர் நோர்க்கும் பிரச்சினைகள்ää அல்லது தேவைகள் பற்றி அவாதானித்ததாகவோ கேட்டறிந்ததாகவோ  அறிய முடியவில்லை.

      அதிகமான விடுதிகளில் ஆறு நோயாளர்களுக்கு ஒரு மருத்துவத்தாதி என்ற வீதம் நியமிக்கப்பட்டும் சில நேரங்களில் அதற்கு குறைவான எண்னிக்கையிலான மருத்துவத்தாதிகள் நியமிக்கப்பட்டு வருகின்ற அதே சமயம் றுயுசுனு டுயுடீழுசுளு  ஒருவர் அல்லது இருவரே நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களால் விடுதியில் தங்கியிருந்து இரவு முழுக்க சாப்பிடாமல் எக்ஸிரேää  ஸ்கயின் மற்றும் இன்னும் பல சோதனைகளை   மேற்கொள்ள காத்திருக்கும் நோயாளர்களை ஒரே நேரத்தில் குறித்த சோதனைகளுக்கு கொண்டு செல்வதற்கு முடியாமல் இருப்பதை காணமுடிகின்றது அத்தோடு உரிய நேரத்தில்  விடுதியில் தங்கியிருக்கும் நோயளர்களுக்கு உணவுகளை பரிமாறவும் முடியாதுள்ளது இதனால் நோயாளர்கள் பல்வேறு  அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர். அதே சமயம் WARD LABORS  பற்றாக்குறை என்று கூறப்படுவதையும் அறிய முடிகின்றது ஆனால் அதிகமான WARD LABORS  கட்டிடம் உடைத்தல்ää தீந்தை மைபூசுதல்ää மேசன் வேலை செய்தல் என அவர்களது நியமணத்திற்கு அப்பால் பல்வேறு வேலைகள் வழங்கப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது அவ் றுயுசுனு டுயுடீழுசுளு  களை அதிலிருந்து விடுவித்தால் விடுதியின் றுயுசுனு டுயுடீழுசுளு  பற்றாக்குறையை நிவர்த்தி செய்து நோயாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும்.  

     எக்ஸிரையின் கதிர்வீச்சுத்தாக்கம் மிக பாதிப்புடையது என்பதால் அதற்கான அறையை தயார் செய்யும் போது கட்டிடத்தின் சுவர்களின் நடுவே ஈயத்திலான தகடுகளை கொண்டு அமைக்கப்படுவதாக அறிகின்றேன் அது அவ்வாறு இருக்க மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் எக்ஸிரே எடுக்கும் அறையின் கதவின் கண்ணாடி பல மாதங்களாக உடைந்த நிலையில் காணப்படுவதோடு அதற்கு காட்போட் மட்டை கொண்டு அடைக்கப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது  அதற்கு மேலாக எக்ஸிரை எடுக்கும் அறையின் எதிரே ஸ்கையின் எடுக்கும் அறையும் அமைந்துள்ளது அங்கு ஸ்கையின் எடுப்பதற்கு தினமும் அதிகமான கற்பினித்தாய்மார் தொடக்கம் இன்னும் பல நோயாளர்களும்  வரிசையாக காத்துக் கொண்டு நின்றிருப்பதையும் காணமுடிகின்றது எக்ஸிரை அறையின் கதவுக் கண்ணாடிக்கு காட்போட் மட்டை கொண்டு அடைக்கப்பட்டுள்ளதால் அதனுடாக வெளியாகும் கதிர்வீச்சுத் தாக்கம் கற்பினித்தாய்மாரையும் அவர்களின் வயிற்றில் இருக்கும் சிசுவையும் பாரிய தாக்கத்திற்கு உள்ளாக்கும் அதனை உடன் திருத்தியமைத்தால் அவர்களை அதன் தாக்கத்திலிருந்து பாதுகாக்க முடியும்.

      தினமும் கிளினிக்குகளுக்காக பொத்துவில் தொடக்கம் மூதூர் வரையிலான பல நூற்றுக்கணக்கான நோயாளர்கள் இவ்வைத்தியசாலையை நம்பி வருகின்றனர் அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பரிசோதனை செய்யபட்டு முடிவுற்றாலும் மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பல மணி நேரம் சாப்பாடும் குடிதண்ணீரும் இன்றி காத்துக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது குறித்த பகுதியில் ஐந்து மருந்தகங்கள் காணப்படுகின்ற போதிலும் இரண்டே இரண்டு மருந்தகங்கள் மட்டுமே திறக்கப்பட்டு மருந்து மாத்திரைகளை வினியோகிப்பதை காணக்கூடியதாகவுள்ளது எனவே அதிகமான நோயாளர்கள் வருகைதருகின்ற செவ்வாய்ää புதன்ää வியாழன் ஆகிய தினங்களிலேனும் குறித்த ஐந்து மருந்தகங்களையும் திறந்து மருந்து மாத்திரைகளை வழங்க நடவடிக்கை எடுத்தால் குறிப்பிட்ட சில மணி நேரத்தில் அனைத்து நோயாளர்களுக்கும் மருந்து மாத்திரைகளை வழங்கி தூர இடங்களில் இருந்து வருகின்ற நோயளர்கள் குறித்த நேரத்திற்கு வீடு செல்வதற்கு ஏதுவாக இருக்கும்.
     
      வைத்தியசாலையின் விடுதியில் தங்கியிருக்கும் நோயாளர்களை மதிய நேரத்தில் பார்வையிடுவதற்கும் உணவுகளை வழங்குவதற்கும் வருகை தருகின்ற பார்வையாளர்கள் தங்குமிட வசதி இல்லாத காரணத்தால் வயோதிபர்கள்; தொடக்கம் சிறுவர் சிறுமிகள்ää தாய்மார்கள் கைகுழந்தைகள் என பலதரப்பட்வர்கள் வீதியோரங்களிலும் வைத்தியசாலையின் நடைபாதைகளிலுமாக அங்குமிங்கும் கொளுத்தும் வெயிலில் கால் கடுக்க கடுக்க நின்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது எதிர் வருகின்ற காலப்பகுதி பருவ பெயர்ச்சி மழைகாலமாக இருப்பதால் பார்வையாளர்கள் விடுதிகளை பார்வையிடும் நேரம் வரை தங்கியிருப்பதற்கு ஒரு பொருத்தமான இடத்தை தயார் படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
   
       மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் சிகிச்சை பெறுவதற்கு பல பிரதேசங்களிலும் இருந்து வெளிநோயாளர் பகுதிக்கு மிக அதிகமானவர்கள் வருகை தருகின்றனர் அவர்களுக்கு சிட்டை அல்லது இலக்கம் வழங்கப்படுகின்ற போது எந்த ஊர் என்ன சாதி என்று வினவிய பின்னரே சிட்டைகள்ää அல்லது இலக்கங்கள் வழங்கப்படுவதை அறிய முடிகின்றது சில சமயங்களில் இனத்தையும் பிரதேசத்தையும் குறிப்பிட்டு நீங்கள் அங்கு சென்று மருந்து எடுக்கலாம் தானே உங்கள் ஊரில் வைத்தியசாலை இருக்க ஏன்? இங்கு வந்து எங்களை கஸ்டப்படுத்துகின்றீர்கள் என கடிந்து கொள்வதையும் அறியமுடிகின்றது இது ஒருபோதும் ஆரோக்கியமானதொரு செயற்பாடக இருக்க முடியாது எனவே அதனை தவிர்ந்து வெளிநோயாளர் பகுதிக்கு வருகின்ற அனைத்து நோயாளர்களுக்கும் பாகுபாடு இன்றி கேள்விக்கணைகளுக்கு அப்பால் வெளிநோயாளர் பகுதியில் மருந்து எடுப்பதற்கு சிட்டைகள் அல்லது இலக்கங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
   
     இவ்வாறு இன்னும் எத்தனையோ குறைபாடுகளையும் நோயாளர்கள் எதிர் நோர்க்கும் அசௌகரியங்களையும் பட்டியல் இட முடியும் எனவே மேற்குறித்த குறைகளை நிவர்த்தி செய்து ஒரு சிறந்த வைத்தியசாலையாக செயற்பட ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிள்றேன்

இவ்வண்ணம்


………………………..
NK றம்ழான் JP
உறுப்பினர் வைத்தியசாலைக் குழு
போதனா வைத்தியசாலை
மட்டக்களப்பு

பிரதிகள்
01 கௌரவ அல்ஹாஜ் MLAM ஹிஸ்புள்ளாஹ் பிரதியமைச்சர் (மட். மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர்)
02 அரசாங்க அதிபர்) மட்டக்களப்பு
03-ஊடகங்கள்


No comments:

Post Top Ad