இன்று முதல் அதிவிரைவு தபால் சேவை ஆரம்பம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, November 07, 2013

இன்று முதல் அதிவிரைவு தபால் சேவை ஆரம்பம்

(nf)
இலங்கை தபால் சேவை வரலாற்றில் முதன்முறையாக அதிவிரைவு தபால் சேவை இன்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் அதிவிரைவு தபால் சேவை இன்று முற்பகல் 10 மணி ஒரு நிமிடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதிவிரைவு தபால் சேவையின் ஊடாக 24 மணித்தியாளத்திற்குள் தபாலை உரியவருக்கு சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 9 வாகனங்கள் இந்த சேவையில் ஈடுப்பட்டுள்ளன.
இதன்பிரகாரம் கிழக்கு மாகாணத்திலும் அதிவிரைவு தபால் சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு மாகாண தபால் மாஅதிபர் வாசுகி அருள்ராஜா தலைமையில் இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு பிரதான தபால் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம தபால் அதிபர், சிரேஷ்ட நிர்வாக செயலாளர், உள்ளிட்ட பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
குறைந்த கட்டணத்தில் இந்த சேவைகள் முன்னெடுக்கப்படுவதுடன், 20 கிராமிற்கு ஆரம்ப விநியோக வலயத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு 50ரூபா கட்டணமும், ஏனைய பகுதிகளுக்கான விநியோகக் கட்டணமாக 60 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.
மேலதிக ஒவ்வொரு 10 கிராமிற்கும் 10 ரூபாவால் கட்டணம் அதிகரிக்கப்படும் எனவும், கிழக்கு மாகாண தபால் மாஅதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post Top Ad