ஆர்ப்பாட்டங்களினால் இலங்கைக்கு தலைகுனிவு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, November 12, 2013

ஆர்ப்பாட்டங்களினால் இலங்கைக்கு தலைகுனிவு

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை அரசியல் கோணத்தில் இருந்து பார்க்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவாள மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அரசியல் இலாபங்களை கருத்தில் கொண்டு சிலர் ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை மேற்கொண்டு உலக தலைவர்கள் எதிரில் இலங்கைக்கு தலைகுனிவை ஏற்படுத்த முயற்சிப்பது நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளும் துரோகம்.
நாடு என்ற வகையில் ஒன்றாக இணைந்திருக்க வேண்டிய சந்தர்ப்பத்தில், பல்வேறு அரசியல் கோணங்களில் பார்த்து அரச தலைவர்கள் மாநாட்டை தரம்தாழ்த்த அரசியல்வாதிகள் முயற்சித்து வருவதை காணமுடிகிறது.
அரசியல் ரீதியாக பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் உலக தலைவர்கள் முன்னால் சகலரும் நாட்டுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதை சிலர் மறந்து போயுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் இப்படியாக செயற்படுவது பொது எதிரிக்கு சாதமான நிலைமையை ஏற்படுத்தும். உலக தலைவர்களின் மாநாடு ஒன்று நடைபெறவுள்ள உள்ள நிலையில் முழு உலகத்தின் கவனமும் இலங்கை மீது திரும்பியுள்ளது.
இந்த மாநாட்டின் மூலம் நாட்டுக்கு பல பிரயோசனங்கள் கிடைக்கும். முதலீட்டாளர்கள் வந்து நாடு அபிவிருத்தி அடையும்.  எவர் ஆர்ப்பாட்டங்களை செய்தாலும் நாட்டுக்கு கிடைக்க போகும் வெற்றியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.

No comments:

Post Top Ad