அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் பல பௌத்த அடிப்படைவாத அமைப்புகள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, November 30, 2013

அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் பல பௌத்த அடிப்படைவாத அமைப்புகள்


அரசாங்கத்தின் ஆசிர்வாதத்துடன் பௌத்த இனவாதத்தை அடிப்படையாக கொண்டு பல்வேறு அமைப்புகள் உருவாக்கியுள்ளதாக சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் பிமல் ரதநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் ஆசிர்வாதத்துடன் செயற்படும் இந்த இனவாத அமைப்புகள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டு அவர்களை சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றன.
இலங்கை என்ற நாடு சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என இந்த நாட்டில் பிறந்த அனைவரும் உரிமையுள்ள நாடு. இந்த உரிமையை விகாரைகளிலோ, கோயில்களிலோ, பள்ளிவாசல்களிலோ கேட்டு பெற முடியாது.
இலங்கையில் பிறந்த அனைவருக்கும் உரித்தான பிறப்புரிமை. சிங்களவர், தமிழர், முஸ்லிம் என பிளவுப்படாமல் சகலரும் ஓரினமாக, நாட்டின் தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post Top Ad