பொலிஸாரின் இடமாற்றத்தை வன்மையாக கண்டிக்கிறோம் ; முஸம்மில் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, November 13, 2013

பொலிஸாரின் இடமாற்றத்தை வன்மையாக கண்டிக்கிறோம் ; முஸம்மில்கொழும்பு பொலிஸ் குற்றச் செயல்கள் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட்ட பொலிஸார் திட்டமிட்ட இடமாற்றம் செய்யப்பட்டிருந்தால் அதனை வன்மையாக கண்டிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் தெரிவித்தார்.
கொழும்பு நகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் கசினோ சூதாட்டம் நிலையம் ஒன்றை முற்றுகையிட்டதாலேயே இந்த இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரியவருகிறது.

நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது பொலிஸாரின் கடமை. அந்த பாரிய பொறுப்பை நிறைவேற்றும் சந்தர்ப்பத்தில் எப்படியான அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் அதனை அனுமதிக்க முடியாது.
கிராமம் ஒன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தால், இவ்வாறான இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்காது என்பதால் பொலிஸார் அண்மையில் சுற்றிவளைத்த சூதாட்டம் நிலையம் ஒரு ஆடம்பர சூதாட்ட நிலையமாக இருக்க வேண்டும். இது தொடர்பாக எழும் சந்தேகங்களை தவிர்க்க முடியாது.
அத்துடன் சட்டம் ஒழுங்கை பாதுகாத்ததால் பொலிஸாருக்கு இடமாற்றம் செய்யப்படுமாயின் அந்த நிலைமையை சிறிதாக எண்ணிவிட முடியாது.
சட்டம், ஒழுங்கை பாதுகாப்பது மற்றும் பொலிஸ் துறைக்கு பொறுப்பானவர் என்ற வகையில் இது சம்பந்தமாக உடனடியாக கவனம் செலுத்தி தவறுகள் எதுவும் நடந்திருந்தால் இதனை திருத்த ஆவன செய்ய வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக முஸ்ஸாமில் கூறியுள்ளார்.

No comments:

Post Top Ad