கொழும்புக்கு கெரோயின் வரவழைப்பவர்களின் பெயரும் ஊர் விபரமும் எனக்கு தெரியும் ; ஞானசார - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 29, 2013

கொழும்புக்கு கெரோயின் வரவழைப்பவர்களின் பெயரும் ஊர் விபரமும் எனக்கு தெரியும் ; ஞானசார


கொழும்புக்கு ஹெரோயின் போதைப் பொருளை வரழைப்பவர்களின் பெயர்களும் அவர்களின் ஊர் விபரங்களும் தனக்கு தெரியும் எனவும் அது பற்றி அவசியமான இடங்களில் அறிவித்துள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அவர்களின் பெயர்களை ஊடகங்களில் வெளியிடுவது நாகரீகமான செயல் அல்ல. தற்பொழுது கைது செய்யப்படும் நபர்கள் தான் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பிரதிபலனே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இருக்கும் போதைப் பொருள் விற்பனையாளர்களை அங்கிருந்து விரட்டும் போராட்டம் ஆரம்பிக்கப்படும்.
நாடாளுமன்றத்தில் இருக்கும் போதைப் பொருள் விற்பனையாளர்கள், பாதாள உலக குழுவினர், சண்டியர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, முதுகெலும்புள்ளவர்களை பொதுபல சேனாவில் இருந்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad