புகைத்தலற்ற வலயங்களை உருவாக்க அகில இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் நடவடிக்கை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, November 13, 2013

புகைத்தலற்ற வலயங்களை உருவாக்க அகில இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் நடவடிக்கை

(vi)

புகைத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் தெரிவு செய்யப்பட்ட நகரங்களில் புகைத்தலற்ற வலயங்களை உருவாக்க அகில இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 
இதற்கிணங்க தெரிவு செய்யப்பட்டுள்ள நகரின் பிரதான வைத்தியசாலைகளை மையப்படுத்தி 38 வைத்திய அத்தியட்சகர் பிரிவுகளில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
 
புகைத்தலிலிருந்து இளம் சந்ததியினரைப் பாதுகாக்கும் நோக்குடன் புகைத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்குடனேயே புகைத்தலற்ற வலயங்களை நகரங்களில் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
அதேவேளை, காத்தான்குடி நகரசபை எல்லைக்குட்பட்ட கடைகள் மற்றும் ஹோட்டல்களில் சிகெரட் மற்றும் புகைத்தலைத் தூண்டும் பொருட்கள் விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad