பொதுநலவாய வர்த்தக மாநாடு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, November 12, 2013

பொதுநலவாய வர்த்தக மாநாடு


பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கு முன்னோடியாக இடம்பெறும் பொதுநலவாய வர்த்தக மாநாடு கொழும்பில் இன்று பாரம்பரியமான மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமானது.


வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்இ முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனஇ பொதுநலவாய வர்த்தக மாநாட்டின் தலைவர் கலாநிதி மோகன் கௌல் மற்றும் பெரும் திரளான உள்நாட்டுஇ வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
இம்மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றுகையில்- சமாதானம் நிரம்பிய இந்த நாடு உங்கள் வருகையால் மகிழ்ச்சியடைகின்றது. இந்த பொதுநலவாய அமைப்பானது உலகின் சில சிறிய மற்றும் பெரிய நாடுகளை கொண்ட உலகின் செல்வந்த மற்றும் வறிய பிரஜைகளை உள்ளடக்கியது.

சராசரி தலா வருமானம் 250 அமெரிக்க டொலர்கள் தொடக்கம் 50000 டொலர்கள் வரை காணப்படுகினறது. எனவே தான் எமது மாநாட்டின் தொனிப்பொருளானது ''சிறந்த உருவாக்கம் மற்றும் சமூக அபிவிருத்தியை பகிர்ந்து கொள்ளல்'' என்ற தலைப்பில் அமைந்துள்ளது

பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளுக்கு இடையில் பாரியளவில் பொருளாதார இடைவெளி காணப்படுகின்றது.
1971ம் ஆண்டு முதல் இந்த முரண்பாட்டு நிலைமை நீடித்து வருகின்றது.
வறுமையை இல்லாதொழிப்பது குறித்து பேசப்பட்ட போதிலும் அதற்கான தீர்வுகள் இதுவரையில் வழங்கப்படவில்லை.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கடந்த கால பிரகடனங்களில் குறிப்பிடப்பட்டதற்கு இணங்க இதுவரையில் வறுமை ஒழிப்பு தொடர்பில் காத்திரமான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை என்றார்.
பொதுநலவாய வர்த்தக மாநாட்டின் தலைவர் - மோகன் கௌல் உரையாற்றுகையில்-

இலங்கை தனது வர்த்தக சமூகத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்துவதற்கு சிறந்த அடித்தளமாக இந்த மாநாடு அமைகிறது.
இந்த மாநாட்டின் ஊடாகஇ ஆடைக் கைத்தொழில்இ துறைமுக சேவைகள்இ தோட்டத்துறைஇ சக்திஇ தகவல் தொழில்நுட்பம் அல்லது தொழில்சார் சேவைகளில் சிறந்த வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த நிகழ்வு இலங்கையின் முதலீட்டில் அதிகரிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உரையாற்றுகையில்-
கிடைக்கும் புதிய வாய்ப்புக்களின் அதிகபட்ச நன்மையை திறமையானஇ வளமுள்ள இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.No comments:

Post Top Ad